பக்கம்:அங்கும் இங்கும்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
93
 

அழிக்கப் போர் தொடுக்க வந்தனர். அலுவலகங்களில் பணி புரிவோர் வந்தனர். தொழிற் கூடங்கிகளிலே பணிபுரிவோர் வந்தனர்.

அம்மட்டோ ? மாணவ, மாணவிகள் வந்தனர். உயர் நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிலுள்ள மாணவ மாணவிகள் பல நூறாயிரவர் எழுத்திதறிவிப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர்.

இவர்களில் எந்தப் பிரிவினரும், ஏற்கனவே, மேற் கொண்டுள்ள தங்கள் பொறுப்புகளைக் கழித்து விட்டு, புதுப் பொறுப்பிற்கு வரவில்லை. ஆசிரியர்கள் தங்கள் கல்விக் கூடப் பணியோடு, இப் பொதுத் தொண்டைக் கூடுதலாக மேற்கொண்டார்கள். அலுவலகத்தாரும் அப்படியே. மாணவ மாணவிகளும் தங்கள் படிப்பையும் கவனித்துக் கொண்டு, இத் தேசத் தொண்டை மேற்கொண்டார்கள்.

எழுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்டோரில் பலர், மேற் கொண்டு ஊதியம் பெறாமல், தியாகிகளாகப் பணிபுரிந்தனர். குடும்பச் சூழ்நிலை காரணமாக, அதிகப் படியான ஊதியம் தேவைப்பட்ட ஓரளவினர் மட்டுமே, முதியோர் கல்விக்காக ஊதியம் பெற்றனர்.

சாதாரண கல்விக்கூட ஆசிரியர் கூட முதியோர் கல்விக்குப் பயிற்சி பெற்றவர் அல்ல அலுவலகத் தோழர் களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற நிலை. ஆர்வம் பிடித்துத் தள்ள, எழுத்தறிவிப்பு இயக்கத்தில் குதித்துவிட்ட பல இலட்சம் பேருக்கும் முதியோர் கல்வி கற்பிப்பதற்கான பயிற்சி தேவைப்பட்டது.

பயிற்சிக் கூடங்களைத் தொடங்கி, வேலை செய்து கொண்டிருப்பவர்களை அங்கு இழுத்து வந்து, பயிற்சி கொடுத்து அனுப்புவது ஆகாத காசியம். அதிலே பெருங் கால தாமதம் ஏற்படும். குடும்பத்தை விட்டு நெடுந்துாரம் சென்று