பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

சாஸனங்கள்

இப்பாகங்கள் எவையென்று நிச்சயமாகத் தெரியவில்லை. வினய ஸமுகஸே என்பது புத்தர் காசியில் செய்த முதல் உபதேசத்தைக் குறிப்பிடுகிறதென்று ஓர் அமேரிக்க வித்துவான் எழுதுகிறார். இதற்கு தர்ம சக்ரப் பிரவர்த்தன ஸூத்திரம் என்று பெயர். மற்ற உரைகள் எங்கெங்குகாணப்படுகின்றனவென்று இரண்டாம் அனுபந்தத்தில் கூறியிருக்கிறோம்.

2. உபதிஷ்யன் என்பவன் மதக்கிரந்தங்களில் ஸாரிபுத்திரன் என்ற பெயரால் குறிப்பிடப்பட்ட புத்தருடைய பிரதம சீஷரில் ஒருவன். புத்தருடைய சம்பாஷணையிற் பல ஸாரிபுத்திரனின் கேள்விகளிலிருந்து உண்டாகின்றன.