பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்தாம் சாஸனம்

99

5. தர்மமகாத்திரரின் அலுவல்கள்

.

தேவர்களுக்குப் பிரியனான பிரியதர்சி அரசன் இப்படிச் சொல்லுகிறான். நன்மைகள் செய்வது மிகக் கஷ்டம். நற்கருமங்களைத் தொடங்குகிறவன் வெகு சிரமமான காரியத்தைச் செய்கிறான். பல நற்கருமங்கள் என்னால் செய்யப்பட்டிருக்கின்றன.1 என்னுடைய பிள்ளைகளும் பேரரும் யுகத்தின் முடிவுகாலம் வரையும் இவ் வண்ணமே நடப்பாராகில் சுகிருதம் செய்தவராவர். எவன் ஒருவன் தனது கடமையை அசட்டை செய்கிறானோ அவன் பாபத்தைச் சம்பாதித்துக் கொள்ளுகிறான். பாபம் செய்வது நிரம்ப சுலபம்.

ஆதிமுதல் இதுவரையும் தர்மமகாமாத்திரர் என்ற அதிகாரிகள் கிடையா, நான் முடிசூடி பதின்மூன்று வருடங்கள் சென்ற பின் தர்மமகாமாத்திரரை நியமனஞ் செய்தேன். எல்லா மதத்தினருக்கும் தர்மத்தைப் போதித்து, தர்மத்தைச் சேர்ந்த விஷயங்களைக் கவனித்து மேற்கெல்லைப் புறமுள்ள யவனர் காம்போஜர் காந்தாரர் ராஷ்டிரிகர் பிதேனிகர் முதலியோரையும் நோக்கி, இவர் பிரவிர்த்தி செய்து வருகின்றனர். சேவகர் பிராமணர் பணக்காரர், அனாதைகள், கிழவர் முதலியோருக்குத் தர்மத்தை யனுசரித்து2 உதவிகள் புரிந்து தர்மத்தை அனுசரித்தவர்களைக் கவலையிலிருந்து நீக்கி உதவுவதற்காகவும் இவர் பிரவிர்த்தி-