பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அசோகனுடைய சாஸனங்கள்


அவதாரிகை

1. இந்தியாவின் பூர்வ சரித்திர ஆராய்ச்சி

ந்தியாவின் பூர்வ சரித்திரமானது மானிட ஜாதியின் முன்னேற்றத்தை விளக்குவதற்கு மிக அரிய சாதனமாம். இந்திய சரித்திரத்திலுள்ள அரச பரம்பரையில் அசோகன் ஓர் நடுநாயகமாக விளங்குகின்றான். இவனுடைய வினோதமான சாஸனங்களைப் படித்துணர இவ்வரசனைப்பற்றிய எல்லா விஷயங்களையும் முன்னுரையாகக் கூறுவது அவசியமெனக் கருதுகிறோம்.

நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்வரையும் மேனாடுகளில் இந்தியாவின் பூர்விக சரித்திரத்தைப்பற்றி மிகக் குறைவான அறிவுதான் இருந்தது. அப்போது முகம்மதியர் வருகைக்கு முன்னுள்ள காலத்தின் சரித்திரத்தை யாரும் தெரிந்து கொள்ளவில்லை, கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவில், மேல் நாட்டார் ஸம்ஸ்கிருத இலக்கியம் என்ற மகாசமுத்திரத்தின் ஆழத்தையும் விரிவையும் உணர ஆரம்பித்தனர். ஆயினும், உலகத்தின் சரித்திரத்தில் இந்திய சரித்திரமானது மிகவும் முக்கியமான பாகமென்பது ஒருவருக்கும் புலப்படவில்லை. நம்