பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

சாஸனங்கள்

12. சமரசபாவம்

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் எல்லாமதத்தினருக்கும் இல்லறத்தார் துறவிகள் எனப் பாராட்டாமல் கொடைகள் அளித்து பூஜை மரியாதைகள் செய்து வருகிறான். தேவர் பிரியன் வற்புறுத்துவது என்னவென்றால், தானம் முதலிய வெளி மரியாதைகள் பாராட்டப்படவேண்டுமென் றல்ல, சகல மதங்களுக்கிடையிலும் சமரசபாவம்1 உண்டாக வேண்டுமென்பதே. சமரசபாவம் என்பது பலவிதமாகும். அதற்கு மூலாதாரம் சொல்நெறியே2. அஃது எப்படிப்பட்ட தென்றால், காரணமின்றிப் பிறர்மதங்களைத் தூஷணை செய்வதையும் சுயமதத்திற்குப் பக்ஷபாதமான கண்யஞ் செய்வதையும் தவிர்த்தலே. சகல மதங்களிலும் ஓர் விஷயத்தில் அல்லது மற்றோர் விஷயத்தில் மேன்மையிருப்பதால் புறமதங்களுக்கு எல்லோருடைய மரியாதையும் உரியது.

இப்படிப்பட்ட நடக்கையால் சுயமதத்திற்கு கண்யம் ஏற்படுவதோடுகூட, புறமதங்களுக்கும் கண்யம் ஏற்படுகிறது. இதற்கு நேர் எதிராக நடப்பவன் புறமதங்களை அகௌரவம் செய்வதோடுகூடத் தன் சொந்த மதத்திற்கும் கேடு விளைத்துக்கொள்கிறான். அது எப்படி என்றால், சுயமதத்தின்பேரிலுள்ள பற்றுதலினால், ‘நான் எனது சுயமதத்திற்குப் பெருமை