பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பன்னிரண்டாம் சாஸனம்

113

அளிப்பேன்' என்று கருதி ஒருவன் சுயமதத்தையே புகழ்ந்து மற்ற மதங்களைப் பழிக்கிறான். இவ்வித மனோபாவத்தால் தனது சுயமதத்திற்கே அவன் மிகுந்த கெடுதியைச் செய்து கொள்கிறான். ஆனால் சமதிருஷ்டி3 மிகுந்த சிலாக்கியம் அது என்னவெனின், நம் கக்ஷியைச் சேராதாரின் மதபோதனைகளுக்குச் செவி கொடுத்து நாம் அவற்றை மதிக்கவும் வேண்டும். தேவர்பிரியன் விருப்பம் இதுவே : எல்லா மதத்தினரும் ஆழ்ந்த கல்வி கேள்வி யுடையோராய், பரஸ்பர அன்புடையோராய் வாழ்ந்து வர வேண்டும். இதுபற்றி எல்லா மதத்தினருக்கும் பின்வரும் அறிக்கை செய்யப்படுகின்றது. தேவர்பிரியன் வெளிவேஷமான தானமரியாதைகளைவிட சகல சமயங்களுக்குள்ளும் சமரச பாவமும் பக்திபகுமானமுமே4 முக்கியமென நினைக்கின்றான்.

இதற்காகவே தர்மமகாமாத்திரரும் ஸ்திரீ மகாமாத்திரரும் வ்ருசபூமிகரும் 5 மற்ற அதிகார வர்க்கத்தினரும்6 வேலைசெய்து வருகின்றனர். இதன் பயனாவது, சுயமதம் அபிவிர்த்தி அடைகின்றது, தர்மமும் பிரகாசமாகின்றது.

ஆக 17 வாக்கியங்கள். I. ஸாரவிர்யி. 2. வவாதி.

3. ஸ்மவாய. 4. வஹுகா. பக்திபகுமானம் ; ல்ஹுகா. தூஷணைகள்.

5. வருவஹூமிகர் என்ற சொல்லுக்குப் பசு மிருகங்கள் கட்டியிருக்கும் தொழுக்களைப் பரிசோதிக்கிற அதிகாரிகளென்று பொருள் கூறப்படுகிறது, ஸ்ரீ, ஜயஸ்வாலின் அபிப்பிராயப்படி இவர் ஓர் வகை தர்ம அதிகாரிகள் போலும், அலைந்து திரிகின்ற ஜனங்களிடையிலும் எல்லைப் பிரதேசங்களில் வசிக்கும் காட்டு ஜாதியாரிடையிலும் தர்மப் பிரசாரஞ்செய்ய நியமிக்கப்பட்டவர், (இந்தியன் ஆண்டிக்குயரி, 1918, பக்கம் 55).

6, நிகாயா, மூன்று நாலு அதிகாரிகள் அடங்கிய கம்மிற்றிகள்