பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

சாஸனங்கள்

13. தர்மத்தின் வெற்றி.

முடிசூடி எட்டு வருடங்களானபின் தேவர்களுக்குப் பிரியனான பிரியதர்சி அரசன் கலிங்கத்தை ஜயித்தான். அப்போது நூற்றைம்பதினாயிரம் ஜனங்கள் கைதி செய்யப்படவும் பதினாயிரம் ஜனங்கள் மாண்டுபோகவும் அதிலும் பல மடங்கு ஜனங்கள் வேறு விதத்தில் இறக்கவும் நேர்ந்தனபோலும். கலிங்கத்தைக் கைப் பற்றின பிறகு தேவர் பிரியன் தர்மத்தில் பற்றுள்ளவனாய், தர்மத்தை விரும்பி, தர்மத்தை வழிபட்டு வாழ்பவனாயினான். இப்போது அவன் கலிங்கத்தை ஜயித்ததற்கு மிகவும் வியசனமடைகின்றான். ஜயிக்கப்படாத ஒரு ராஜ்யத்தைக் கைப்பற்றுவதென்றால் ஜனங்களுக்கு, கொலையும் சாவும் சிறையும் ஏற்படுகின்றன. இவ்விஷயம் தேவர் பிரியனுக்கு அதிகமான வருத்தத்தையும் பச்சாத்தாபத்தையும் செய்திருக்கிறது.


தேவர் பிரியன் இன்னும் அதிகம் வியசனமடைவதற்குக் காரணமிருக்கிறது. இங்கேயும் (கலிங்கத்திலும்) பிராமணர், சமணர், மற்றும் பற்பல மதத்தினர், இல்லறத்தோர், எல்லோரும் வசித்து வருகின்றனர். பெரியோருக்குச் சுச்ரூஷை, தாய் தந்தையருக்கு சுச்ரூஷை, குருசுச் ரூஷை, நண்பர் அயலார் உற்றார் உறவினரிடமும் அடிமை சேவகர்களிடமும் அன்பு, முதலிய குணங்கள் இவரிடையிலும் வேரூன்றிக்