பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதின்மூன்றாம் சாஸனம்

117

றது.தர்மத்தாலுள்ள வெற்றி திருப்தியையும் களிப்பையும் தருகின்றது. ஆனால், இச்சந்தோஷம் அற்பமே. மறுமை யின்பத்தை அளிக்கும் காரியமே முக்கிய மென்பது தேவர் பிரியன் கருத்தாகும். இத் தர்ம லிகிதத்திலுள்ள கட்டளை எதற்காகவென்றால் எனக்குப் பின் வரும் புத்திரரும் பௌத்திரரும் ‘நாடுகளைப் புதிதாகக் கைப்பற்றுவதே வெற்றி' யென்று நினையாமலிருப்பதற்காகவே. அவர்கள் வெற்றியை விரும்பினபோதிலும் பொறுமையையும் குறைந்த தண்டனைகளையும் உடையோராய், தர்மத்தின் வெற்றியையே வெற்றியெனக்கொள்பவராய் மாறவேண்டும். இது, இம்மை மறுமைகளுக்குப் பிரயோஜனமுள்ளது. எல்லோருக்கும் நன் முயற்சியும் சந்தோஷமும் உண்டாக வேண்டும். இம்மை மறுமைகளின் க்ஷேமத்தையும் அவர் தேடிக்கொள்வர்ராக.

இம் மொழிபெயர்ப்பு ஷாபாஸ்கெர்ஹி பாடத்தை அனுசரித்தது. இங்குள்ள 32 வாக்கியங்களில், 6 முதல் பாராவிலும், 7 இரண்டாவது பாராவிலும், 7 மூன்றாவது பாராவிலும், 3 நான்காவது பாராவிலும், மிகுதியான 9 கடைசிப் பாராவிலும் வந்துள்ளன.

1. அன்டியோக்கஸ்ஸைப்பற்றி 95 - ம் பக்கம் காண்க, துலமாயனுக்கு ஆங்கிலத்தில் ப்டாலமி என்று உச்சரிப்பு. இவன் எகிப்துதேசத் தரசன். இவன் காலம் கி. - மு. (285 - 247) இவன் மிகப் பெருமையும் வீரமும் வாய்ந்த அரசன். இவனுடைய ஸதஸில் சாஸ்திரங்களும் காவ்யங்களும் மிகுதியாக பாராட்டப் பெற்றன. க்ஷேத்திர கணித ஆசிரியனான யூக்லிட்