பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

அசோகனுடைய சாஸனங்கள்

நாட்டு வித்துவான்களோ, சரித்திரம் என்ற விஷயத்தை ஆழ்ந்த படிப்பும் ஆராய்ச்சியும் அவசியமான ஒரு சாஸ் திரமாகக் கருதவில்லை. மேனாட்டாரோ, தமது பிரகிருதி சாஸ்திரத் தேர்ச்சியிலும் நாகரிகத்தின் மேன்மையிலும் தாமே மயங்கித் தங்களுக்குப் புவியில் எவரும் நிகரில்லை யென்றும் மற்ற ஜாதியாரின் சரித்திரம் உலகத்தின் முற்போக்குக்கு அவசியமில்லையென்றும் நினைத்து இறு மாப்படைந்திருந்தனர். ஓர் புது தினம் உண்டாவது போல மெள்ள மெள்ள இருள் அகன்று இப்போது ஒரு புது உணர்ச்சி பரவிவருகிறது, இந்த நூறு வருஷங்களுக்குக் கிடையில் இந்தியாவின் சரித்திரம் உலகத்தின் முன்னேற்றத்துக்கு எவ்வளவு அவசியமானது என்பதை அறிஞர் உணர்ந்து வருகின்றனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் 
சரித்திர அறிவின்
வளர்ச்சி

நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி தொடங்கிற்று. அதன் பிறகும் பல வருஷங்களுக்கு நம் தேசத்தின் பூர்வசரித்திரம் உள்ளே பிரவேசிக்க வழியில்லாத பெருங் காடாயிருந்தது. விரிவான புராணக் கதைகளும் தர்ம சாஸ்திரங்களும் தத்துவ வேதாந்தக் கிரந்தங்களும் ஐதிஹ்யங்களு மல்லாமல், காலநிர்ணயமுள்ள விவரங்கள் இச் சரித்திரத்தில் காணப்படவில்லை. தொடக்கம், முடிவு, எல்லை முதலிய யாதொரு அளவுமில்லாமலும் கால வரையறை யில்லாமலும் தொகுக்கப்பட்ட புஸ்தகங்கள் இந்தியாவின் சரித்திரமாய் விளங்கின. இப்படிப்பட்ட காட்டினூடே நுழைந்து செல்ல நமது "புராதனவஸ்து சாஸ்திரிகள்” ஓர் வழியை அமைத்திருக்கிறார்கள்.