118
சாஸனங்கள்
என்ற பெயர்போன புலவன் இவனால் ஆதரிக்கப் பெற்றவன், அக்காலத்தில், செங்கடற் கரையோரத்தில் பல துறைமுகங்கள் ஏற்பட்டன. மகன் என்ற பெயர் ஆங்கிலத்தில் மகாஸ் என வழங்கும். அவன் எகிப்துக்கு மேற்குள்ள கைரினே தேசத்து அரசன்; தாய் வழியில் துலமாயன் சகோதரமுறையினன். காலம் கி.-மு.285-258. அலகஸுதரன், அலெக்ஸாந்தர் ; கிரீக் தேசத்து எப்பைரஸ் என்ற நாட்டின் அரசன். இவன் அந்தியோக்கனுக்குப் பகைவன், அந்தியோக்கனைப்பற்றி இரண்டாம் சாசனக் குறிப்பிற் காண்க. அந்தேகினன் அந்திகோனாஸ். காலம் 277-238 ; இவன் மாஸிடோணியா தேசத்து அரசன்.
2. யவனர், காம்போஜர். இவர் எங்கிருந்தவ ரென்பதையும் எப்பாகத்தில் வசித்து வந்தன ரென்பதையும் படத்திற் கண்டு கொள்க. சிலரைப்பற்றி நமக்கு ஒருவித தெளிவும் உண்டாகவில்லை. உ-ம். ‘நாலுக தேசத்து நாலுபம்தியர்.’
“யவனர் நாடொன்று தவிர்த்து மற்ற நாடுகளுள் பிராமணர் சமணர் இல்லாத நாடே யில்லை” இந்த வாக்கியம் மான்ஸராவிலும், கால்ஸியிலும் ! 3-ம் வாக்கியத்தின் பின், அதாவது இரண்டாவது பாராவின் இறுதியில் வருகின்றது. யவனர் நாட்டில் அப்போது பிராமணர் சமணர் வசிக்கவில்லை என்ற சரித்திர உண்மை இதிலிருந்து கிடைக்கின்றது.