பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாஸனங்கள்

122


ஜனங்களும் வியசனமடைகின்றனர். இப்படிப்பட்ட நேரங்களில் நீங்கள் விரும்ப வேண்டியது என்னவெனின் நான் நடுவுநிலைமையைக் கைவிடாமல் காப்பாற்றக் கடவேன் என்றே. ஆனால் சில பிறவிகளுக்கு நியாயத்தில் ஜயம் என்பது அசாத்தியம் ; அவர் (எவரெனின்) பொறாமையுடையோர், சோம்பலுற்றோர், அவசரமுடையோர், இரக்கமிலிகள், மனத்தளர்ச்சியுற்றோர், சோர்வுடையோர், கவனமற்றோர் போன்றவரே. நீங்கள் பிரார்த்திக்கவேண்டியது என்னவெனின், 'இக்குணங்கள் என்னை அணுகாமலிருக்கட்டும்' என்பதே. இந் நீதியைக் கைப்பற்றுவதிற் பொறுமையும் விடாமுயற்சியுமே எல்லாவற்றிற்கும் மூலகாரணமாகும். சோம்பறுற்றோர் தம்மைத் திருத்திக்கொள்ளப் பிரயாசப்பட மாட்டார். ஆனால் எல்லாரும் ஊக்கத்துடன் முயன்று முன்னேற்றமடைய வேண்டும்.

இதுபோலவே நீங்கள் (கடமையை) உணர்ந்து பின்வரும் வாக்கியங்களை சிந்திக்கவேண்டும். 'தேவர் பிரியன் இன்னின்ன விதம் கட்டளையிட்டிருக்கிறான். அவை நிறைவேற்ற வேண்டுவனவாம்.' நீர் இவ்வாணையை நிறை வேற்றுவீரேல் மிகுந்த பயனுண்டு ; புறக்கணித்தால் பெரிய அபாயமாம். தம் கடமையில் தவறுகிறவர்கள் சுவர்க்கத்தையும் இழந்து