பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

சாஸனங்கள்

1.அரசன் ஆளுகையின் தன்மை.

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி ராஜன் இப்படிச் சொல்லுகிறான். நான் முடி சூடி இருபத்தாறு வருஷங்களானபின் இந்தத் தர்ம லிகிதத்தை எழுதச்செய்தேன். தருமத்தில் மிக்க பக்தியும், மிக்க ஆத்ம சோதனையும், மிக்க பணிவும், (பாவத்தினிடம்) மிக்க பயமும், மிக்க முயற்சியும் இருந்தாலன்றி இம்மை மறுமைப் பயன்களை யடைத லரிது. ஆயினும், என் போதனையால் தர்மத்தில் விருப்பமும், அன்பும் நாடோறும் மிகுதியாக வளர்ந்துவருகின்றன ; இனியும் வளர்ச்சியடையும். எனது காரியதரிசிகள்1 யாவரும், உத்தம, அதம மத்திமர் எவராயினும், என் போதனைப்படி பிறரையும் நன்னெறியில் திருப்ப வேண்டும். சஞ்சல புத்தியுள்ளோருக்கு நன்னெறியைப் பற்றின போதனை அவசியம். அந்த மகாமாத்திரரும் இவ்விதமே (தருமோபதேசஞ் செய்து வர வேண்டும்). ஏனென்றால், தர்மத்தினாலேதான் பரிபாலனமுள்ளது; தர்மத்தினாலேதான் ஒழுங்குண்டு ; தர்மத்தினாலேதான் சௌக்கியமடையலாம்; தர்மத்தினாலேதான் காவல் (உள்ளது). இதுவே சட்டம்.

9 வாக்கியங்கள்.

(1) அந்த மகாமாத்திரரைப் பற்றியும் காரியதரிசிகள் அல்லது புலிஸர் அல்லது புருஷர்களைப்பற்றியும் அவதாரிகையில் விளக்கியிருக்கிறோம்.

பொருள் விளங்குவதற்காக ஏழாம் வாக்கியம் எட்டாவதாக எழுதப்பட்டிருக்கிறது.