உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் ஸ்தம்ப சாஸனம்

131

2. அரசனே எல்லோருக்கும் நிதர்சனம்.

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி ராஜன் இப்படிச் சொல்லுகிறான். தர்மமே மேலானது. தருமம் என்பது யாது? பாவமின்மை1 , நற்செயல், இரக்கம், ஈகை, வாய்மை,பரிசுத்தம் என்பனவே. நான் பல மனிதருக்குப் பலவகையால் அகக்கண்ணை2 அளித்திருக்கிறேன். இருகாற் பிராணி, நாற்காற்பிராணி, பறவைகள், நீர்வாழ்வன முதலியவற்றிற்குப் பலவகையால் அனுக்கிரகங்களைச் செய்திருக்கிறேன். தண்ணீர்ப்பந்தலும் வேறு பல நற்செயல்களும் என்னால் செய்யப்பட்டிருக்கின்றன. ஜனங்கள் அறநெறியைப் பின்பற்றி நடக்கவும் இம்மார்க்கம் நிலைத்திருக்கவும் நான் இத் தர்மலிகிதத்தை வரையச் செய்தேன் ; இந்தப் போதனையை அனுசரிப்பவன் சுகிர்தத்தை அடைவன்.

9 வாக்கியங்கள்.

1. அப ஆஸினவம். அல்ப ஆஸினவம். ஆஸினவம் என்பது பெருந்தீங்கு என்னும் பொருளில் வழங்கும் பௌத்தர் பரிபாஷை. இதன் கருத்து அடுத்த சாஸனத்திலிருந்தும் விளங்குகின்றது.

2. சக்ஷுதானம்: தர்மபோதனை மூலமாக அகக்கண்ணையளித்தல்.