பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

சாஸனங்கள்

3 ஆத்மபரிசோதனை.

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் இப்படிச் சொல்லுகிறான். மனிதன் தன் நற்செய்கைகளையே சிந்தித்து, ‘இந் நற்கருமங்கள் என்னால் செய்யப்பட்டவை' என்று நினைத்துப் பெருமையடைகிறான். ஆனால் ஒரு போதும் தன் தீச்செயல்களை நினைத்து ‘மிகத் தீங்காகக் கருதப்படும் இப்பாவச்செயலைச் செய்தேனே' யென்று நினைப்பதில்லை. இவ்வித ஆத்மபரிசீலனை1 மிகவும் அரிது. ஆயினும் மனிதன் இவ்விஷயத்தைச் சிந்திக்கவேண்டும். கொடுமை2, கயமை, கோபம்3, அகம்பாவம்4, பொறாமை பெருங் கெடுதலுக்குக் கொண்டு செல்லுவனவாம். ‘நான் நன்னெறியில் நிற்க வேண்டுமே’ யென்று கருதி மனிதன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். இவ் வுண்மை நன்கு உணரவேண்டுவதாம். அதாவது, ஒருவழி இம்மைக்கு ஏற்றது, மற்றொன்று மறுமைக்கு ஏற்றது.

8 வாக்கியங்கள்.

1. படிவேவம், ஆத்மபரிசோதனை.
2. 3. 4. மூலத்திலுள்ள சொற்களுக்குச் சரியான வடசொற்களாவன ; சண்டி, நிஷ்டூரம், க்ரோதம், மானம், ஈர்ஷ்யை.