உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அசோகனுடைய சாகசனங்கள்

மூன்றாவது, புராதன வஸ்துசாஸ்திரம். இதில் மூன்று முக்கியமான உட்பிரிவுகள் உண்டு. (i) பழைய கட்டடங்களைச் சோதனை செய்வதிலிருந்தும் சிற்பங்களில் காலத்துக்குத் தக்கபடி ஏற்படும் வித்தியாசங்களைக் கவனிப்பதிலிருந்தும் உண்டாகும் அறிவு. (Architecture and Sculpture). (ii) பாறையிலும் கோயில்களின் கற்சுவரிலும் செப்புப் பட்டயங்களிலும் வரைந்து காணப்படும் விகிதங்களைப் படிப்பதனால் கிடைக்கும் அறிவு. (Epigraphy). (iii) பழையகாலத்து நாணயங்களைப் பரிசோதனை செய்வதன் பயனாக உண்டாகும் அறிவு (Numismatics). முதலாவது பிரிவைச் சேர்ந்த ஐதிஹ்யம் என்ற ஆதாரத்திலிருந்து நமக்குக் கிடைத்துள்ள விவரங்கள் அளவற்றவையானாலும் அவற்றை ஒழுங்கு பண்ணிக் காலத்தின்படி வரிசைப்படுத்தியது, புராதன வஸ்து ஆராய்ச்சியின் உதவியும் அந்நிய நாட்டார் எழுதி வைத்துள்ள விவரணங்களின் உதவியுமே. இதன்றி இக்காரியம் அசாத்தியமாயிருந்திருக்கும். புராதன வஸ்து சாஸ்திரத்தின் உதவி பூர்விக இந்தியாவின் சரித்திரத்துக்கு எவ்வளவு முக்கிய ஆதாரமாகுமென்று உணர அசோகனது சாஸனங்கள் தக்க சான்றாகும்.

அசோகன் என்ற பெயருடைய ஓர் அரசன் இந்தியாவில் 
அசோகனது
சாஸனங்களின்
கருத்தை விளக்கிய
ஆராய்ச்சிகள்

ஆண்டதாக இந்துக்களுக்கு நூறு வருஷங்களுக்குமுன் வரையும் கொஞ்சமும் தெரியாமலிருந்தது. ஏறக்குறைய ஆயிர வருஷங்களாக அவன் பெயரே இந்தியரின் ஞாபகத்திலிருந்து மாய்ந்து போயிருந்தது. வட இந்தியாவின் பல பாகங்களில் நின்றிருந்த அசோக ஸ்தம்பங்களை முன்