இந்தியாவின் பூர்வ சரித்திர ஆராய்ச்சி 5
காலத்திலிருந்த ராக்ஷசரின் வேலையென்று நம் ஜனங்கள் கூறிவந்தனர். ஸ்தம்பங்களிலும் பாறைகளிலும் எழுதப்பட்டிருந்த லிகிதங்களுக்கு ஒருவருக்கும் பொருள் தெரியவில்லை. இப்படி இருக்கையில் 1834ஆம் ௵ல் ஈஸ்டு இந்தியாக் 'கம்பனியாரின் நாணயப் பரிசோதனை அதிகாரியாகிய ஜேம்ஸ் ப்ரின்ஸெப் என்பவருக்கு அபூர்வமான பழைய நாணயங்கள் பல கிடைத்தன. இந்த நாணயங்களின் ஒரு பக்கத்தில் க்ரீக் லிபியிலும் மற்றப் பக்கத்தில் அப்போது இந்தியாவில் வழங்கிவந்த இருவகை லிபி ஒன்றிலும் வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தன. இப்படிப்பட்ட நாணயங்களை த்விபாஷை நாணயங்கள்[1] என்று நாம் சொல்லலாம். இந்த நாணயங்கள் இந்தியாவின் வடமேற்குப் பாகத்தில் கி. மு. 200 முதல் கி. பி. 100 வரையும் ஆண்டுவந்த க்ரீக் அல்லது யவன அரசர்களால் அடிக்கப்பட்டவை. க்ரீக் பாஷையிலும் க்ரீக் லிபியிலும் இந்த நாணயங்களைச் செய்த அரசர்களின் பெயரும் விருதுகளும் இவற்றின் ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருந்தன. ஐரோப்பிய வித்துவான்' ஆனதினால் ஜேம்ஸ் ப்ரின்ஸெப்புக்கு க்ரீக்கில் எழுதப்பட்டிருக்கும் விவரங்களை வாசித்து அறிந்துகொள்வது எளிதாயிருந்தது. நாணயங்களின் மறுபக்கத்தில் எழுதியிருப்பது க்ரீக்கில் எழுதப்பட்ட விவரங்களேயென்று அவர் ஊகித்தார். அறியப்படாத இருவகை லிபிகளின் ஒவ்வொரு எழுத்தையும் மறுபக்கத்திலுள்ள க்ரீக் லிபியோடு ஒத்துப்பார்த்து அவ்வெழுத்துக்கள் இன்னின்ன ஒலிகளைக் குறிக்கின்றன வென்று எடுத்துக் காட்டும் பட்டிகை ஒன்றை ப்ரின்ஸெப் தயார்செய்தார். ஸ்தம்பங்-
- ↑ Bi-lingual coins