பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுபந்தம் பௌத்தமறை நூல்கள்

163

பிராயம் கூறலாம். சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் என்ற மேன்மை இவற்றின் நடையில் காணமுடியாது, இதற்கு எதிராக, ஒரே அடுக்கான வாசகங்களும் சொற்றொடர்களும் திரும்பத் திரும்ப வருவது இச்சூத்திரங்களுக்கு இயல்பாயிருக்கிறது. முன் 75-ம் பக்கத்தில் கூறியுள்ள படி அசோக சாஸனங்களின் நடையும் ஏறக்குறைய இப்படியே இருக்கின்றது. சூத்திரங்கள் புத்தருடைய ஜீவகாலத்தில் தோன்றிய முதலுரைக்கு உண்மையான பிரதியாயிருக்கவேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதப்பட்டமையே இவ்வித நடைக்கு காரணமாதல் வேண்டும்.

அனேகசூத்திரங்கள் புத்தருக்கும் அவரைத் தரிசிக்க வந்தோருக்கும் ஏற்பட்ட வினா விடை ரூபமாக இருக்கின்றன. இப்பகுதியை ஐரோப்பாவில் பெயர்போன "ப்ளேட்டோ"வின் சம்பாஷணைகளுக்கு ஒப்பாகக் கூறலாம். தம்மைக் கேள்விகள் கேட்கவந்தோனுடைய வாக்கியங்களையே பெரும்பாலும் உபயோகித்து பதில் உரைப்பதும், எதிர்வினாவுவதும் இயற்கையல்லவா? இப்பகுதிகளுக்கு சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் என்ற சிரேஷ்ட குணம் அமையாதெனினும் இவற்றில் சொல்வன்மையும் அணியழகும் மிகுதியாய்க் காணப்படுகின்றன. இயற்கையின் தோற்றங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உருவங்களும் உபமானங்களும், சமயோசிதமான மேற்கோள்களும், கதைகளும், வரிசையான நியாய வாதங்களும், கேட்போர் மனத்தைப் பல சந்தர்ப்பங்களில் கவரக் கூடியனவாயிருக்கின்றன. ஒரே தர்மபோதனை சொற்பமாறுதலுடன். த்ரிபிடகத்தின் - வேறொரு பாகத்தில் வருதலும் உண்டு.

மூன்று பிடகங்களாவன :- 1 வினய பிடகம்', 2 ஸுத்தபிடகம். 3 அபிதர்ம பிடகம்.

'