பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

அசோகனுடைய சாஸனங்கள்

பட்டிருக்கின்றது. பௌத்தர்களுடைய தத்துவஞானத்தின் படி எல்லாப் பொருள்களும் விஷயங்களும் ஒவ்வொரு எண்களால் குறிக்கப்படும். புத்தர்கள் இரண்டுவகைப்படுவர். பிரத்தியேக புத்தர்கள், ஸம்யக் ஸம் புத்தர்கள். இதுபோலவே, மூன்றுவகைத் துறவிகள், நான்குவகை நன் முயற்சிகள், ஐந்து வகைப் பாவனைகள் (அல்லது தியானங்கள்) ஆறுவித வித்திகள், உண்மை ஞானத்தைத் தரும் ஏழுவிதக் கருவிகள், நிர்வாணத்தை அடைவதற்கான எட்டு வித படிகள், பாரமிதை எனப்படும் புத்தரது பத்து அரும்பெரும் குணங்கள் இவ்வாறு பல சங்கதிகளும் எண்களைக்கொண்டு குறிப்பிடப்படுகின்றன. ஆதலால் சூத்திரங்களும் இம்முறைப்படி அங்குத்தர நிகாயத்தில் அடுக்கப்படுகின்றன. முதலாவது அத்தியாயத்தில் ஒருமைத் தன்மையுடைய விஷயங்களையும், இரண்டாவது அத்தியாயத்தில் இரட்டைத் தன்மையுடையனவற்றையும், மூன்றாவது அத்தியாயத்தில் முத்தன்மையுடையனவற்றையும், இங்கனமே மற்ற அத்தியாயங்களில் அவ்வவ்வத்தியாயங்களின் எண்ணால் குறிப்பிடப்படும் விஷயங்களையும் இம்மறைத் தொகுதியின் ஆசிரியர் கூறுகின்றார்.

அசோகனுடைய பாட்ருசாஸனத்தில் வரும் அலியவ ஸானி (= ஆரியரின் ஸித்திகள்), அனாக தபயானி (= வரப் போவதைப்பற்றிய அச்சம்) என்ற இரண்டும் இந்த நிகாயத்தில் வரும் சூத்திரங்களேயாம்.

V. குத்தக நிகாயம் என்பது பதினைந்து பிரத்தியேகமான நூல்கள் அடங்கிய தொகுதி. இதில் அடங்கிய சில நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை ; சில மிகவும் பழமையானவை. சில மிக அழகிய இலக்கியங்களென மதிக்கத்தக் கலை. ஆயினும், ஸகல பௌத்தர்களும் ஒப்புக்கொள்ளா-