பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுபந்தம் பௌத்தமறை நூல்கள்

173

விதத்தில் உதவி, தற்காலத்தில் தனது கன்றை உலகத்தில எல்லோருக்கும் நிழல்கொடுத்து உதவத்தக்க விருக்ஷமாக வளரச் செய்திருக்கிறது. ஏனென்றால், இன்னும் ஐரோப்பாவிலுள்ள பல தத்துவஞானிகள் க்ஷணிகவாதம் முதலிய பழைய பௌத்தக் கொள்கைகளைப் புதிய விதத்தில் உரைத்து வருகின்றார்கள். பண்டைத் தமிழர் பலரும் பௌத்தசமயமானது மேன்மையான சத்தியமென்றும், எல்லோருக்கும் பொதுவென்றும் நம்பினவராவர் என்பதும் நாம் உணரத்தக்கது. அது கீழ்வரும் மேற்கோள்களால் விளங்கும்,

“ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன்
மாதுயர் எவ்வம் மக்களை நீக்கி,
‘விலங்கும் தம்முள் வெரூஉம்பகை நீக்கி
உடங்கு உயிர் வாழ்க’ என்று உள்ளம் கசிந்துக,
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த
குன்றம்; மருங்கில் குற்றங் கெடுக்கும்
பாதபங்கயம்.”

மணிமேகலை. IC-61-66.

திருமேவு பதுமஞ்சேர் திசைமுகனே முதலாக உருமேவி அவதரித்த உயிரனைத்தும் உயக்கொள்வான், இவ்வுலகும் கீழுலகும் இசை உலகும் இருள் நீங்க, எவ்வுலகும் தொழுதேத்த, எழுந்த செழும் சுடரென்ன இலங்குகதிர் ஓரிரண்டும் விலங்கிவலம் கொண்டுலவ, வலங்குசினைப் போதியின் கீழ் அறம் அமர்ந்த பெரியோய் நீ.

வீரசோழியம் (மணிமேகலை, பக்கம், 306ல் வரும் மேற்கோள்.)