பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அசோகனுடைய சாஸனங்கள்

எல்லோரும் அறியலாயினர். கடைசியாக, கி. பி. 1915ம் ௵ல் ரெய்ச்சூருக்கு அருகிலுள்ள மாஸ்கி என்ற ஊரில் கிடைத்த அசோகக் கல்வெட்டில் அசோகன் என்ற பெயரே வரைந்திருப்பது தெரியவந்ததும் இந்த லிகிதங்களை எழுதியவன் எவன் என்ற சங்கை முற்றிலும் நீங்கி விட்டது.

II. அசோகனின் சரிதை

கி. மு. நான்காம் நூற்றாண்டில் மகததேசம் வட 
மகததேசத்தின்
பெருமை.

இந்தியாவிலுள்ள தேசங்களில் முதன்மையை அடைந்திருந்தது. இந் நாட்டை ஆண்டுவந்த நந்தர் என்ற அரசர்கள் இழிவு குலத்தோராகக் கருதப்பட்ட போதிலும் பராக்ரமசாலிகளாகவும் யுத்தசைன்னியங்களிலும் தளவாடங்களிலும் வலிமை மிகுந்தவராகவுமிருந்தனர். அகநானூறு என்ற பண்டைத் தமிழ் நூலிலுள்ள ஒரு பாட்டில் இவ் வமிசத்தினர் “பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்” என்று சிறப்பித்துக் கூறப்பட்டிருத்தலை இங்கு குறிப்பிடுவது தகுதியாகும். இந்த நூற்றாண்டின் இறுதியில், அதாவது சுமார் கி மு. 325ம் ௵ல், மகதநாட்டில் ஒரு புரட்சி ஏற்பட்டது. சாணக்கியன், விஷ்ணுகுப்தன், கௌடல்யன், கௌடில்யன் என்ற பெயர்களையுடைய ஓர் பிராமண மந்திரியின் சூழ்ச்சிகள் காரணமாக நந்தர் அரசுரிமையை இழக்கவும் சந்திரகுப்தன் என்ற மௌரியவம்சத்தினன் அரசனாகவும் நேர்ந்தன. சந்திரகுப்தன் எல்லா வட இந்திய ராஜ்யங்களையும் கைப்பற்றி யாவற்றையும் ஒரே குடையின் கீழ்க் கொண்டுவந்தான். அதற்கு முன் இத்தகைய விசால-