18
அசோகனுடைய சாஸனங்கள்
நிர்வாணமடைந்த குசிநகரத்தையும், அவர் தர்மப் பிரசாரம் செய்துகொண்டு பலகாலம் வசித்துவந்த ஸ்ரீநாவஸ்தியையும் இவைகளல்லாமல் வேறு இரண்டு க்ஷேத்திரங்களையும் அவர்கள் தரிசித்தார்களாம். புத்தரின் பிறப்பிடமாகிய லும்பினி தற்காலம் ரும்மின்தேயி என்று அழைக்கப்படுகிறது. இந்த க்ஷேத்திரத்தை அசோகன் தரிசித்ததின் அறிகுறியாய்நாட்டப்பட்ட ஸ்தம்பம், வெகு காலமாக மறைந்து கிடந்தது; அது சமீபகாலத்தில் திரும்பவும் உத்தாரணம் செய்யப்பட்டிருக்கிறது. அசோகன் இந்த ஊரிலிருந்த ஜனங்களுக்கு நிலத்தீர்வையைக் குறைத்தானென்று ரும்மின் தேயி ஸ்தம்பத்திலுள்ள லிகிதம் நமக்குத் தெரிவிக்கின்றது. அசோகன் இதே சமயத்தில் கொனாகமனன் என்ற பூர்வபுத்தரின் க்ஷேத்திரத்தைத் தரிசனம் செய்து, அங்கிருந்த ஸ்தூபத்தைப் புதுப்பித்து ஒரு ஸ்தம்பத்தையும் நாட்டிய செய்திகள் ஐதிஹ்யத்தில் கூறப்படவில்லையாயினும் சிலாசாஸன பரிசோதனை மூலமாக நாம் தெரிந்துகொள்ளுகிறோம். இச்செய்திகள் எழுதப்பட்டிருக்கும் ஸ்தம்பமும் ரும்மின்தேயின் அருகிலிருந்து நமக்கு அகப்பட்டிருக்கிறது. இவ்விவரங்கள் அசோகனது தர்மம் எத்தன்மையது என்று தீர்மானிக்க உபயோகமானவை.
நேப்பாளத்தின் தலைநகரமாகிய காத்மாண்டு அல்லது லளிதாபட்டணம் அசோகனால் ஸ்தாபிக்கப்பட்டதென்று சொல்லப்படுகிறது. அங்கு அரசன் பல கோயில்கள் கட்டினானென்றும் அரசன் மகள் சாருமதி அவனுடன் அங்குச் சென்று தன் தகப்பனாரின் வேலைக்கு உதவியாயிருந்து பின் அங்கேயே நிலைத்திருந்தாளென்றும் ஐதிஹ்யத்தில் கூறப்படுகின்றன. இப்பட்டணம் ரும்மின்தேயியின் அருகிலுள்ளதால் இந்நகரத்தின் ஸ்தாபனம்