பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனின் சரிதை

19

ரும்மின்தேயி லிகிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அரசனின் இருபத்தொன்றாம் பட்டாபிஷேக வருஷத்திலேயே நடந்திருக்கலாம்.

தனது பன்னிரண்டாவது பட்டாபிஷேக வருஷத்தில் அரசன் 
துறவி அரசு
நடத்திய விந்தை

பௌத்த ஸங்கத்தைச் சேர்ந்ததால் அவன் சந்நியாஸி ஆனான். கடைசிவரையும் அவன் இந்த ஆசிரமத்திலிருந்து மாறவில்லை போலும். கி. பி. ஏழாவது நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் சஞ்சரித்த இத்ஸிங், துறவியுடையணிந்த அசோகப் பிரதிமையைக் கண்டதாக எழுதுகிறான். ஆனால் ஐதிஹ்யங்களிலும் சாஸனங்களிலும் அசோகனுடைய மனைவிமார்கள் குறிப்பிடப்படுகின்றனர். பிக்ஷூவானபின் தன் ராஜ்ய காரியங்களை அசட்டைசெய்தானென்றும் வடஐதிஹ்யத்தில் கூறப்படுகிறது. தலையைச் சிரைத்துக் , காஷாயவஸ்திரமுடுத்த அரசன் எப்படி சிங்காதனத்தில் வீற்றிருந்தானென்றும் ராஜ்ய காரியங்களைக் கவனித்தானென்றும் நமக்கும் சங்கை உண்டாகிறது. அசோகனுடைய சாஸனங்கள் இந்த சம்சயத்தை முற்றிலும் நிவிர்த்திசெய்கின்றன . “எனது கடமையாக ஏற்பட்டுள்ள வேலையில் நான் காட்டும் ஜாக்கிரதை எனக்கு ஒருபோதும் திருப்திகரமாகிறதில்லை. ஸர்வ ஜனங்களின் அபிவிர்த்திக்காக சதா உழைப்பது என் கடமை.” “எவ்விடத்திலும் ஜனங்களின் வழக்குகளை விசாரணை செய்ய நான் தயாராயிருக்கிறேன்.” இப்படிப் பேசும் அரசன் தன் கடமையை அசட்டை செய்தானென்று சொல்வதை நம்புவது எப்படி? துறவறமும் உலக நன்மைக்குரிய பிரவிர்த்தியும் ஒன்றுக்கொன்று முரணல்லவென்று பகவத்கீதையில் வற்புறுத்தப்படும் கொள்கையே அசோகன் கொள்கைபோலும்.