பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனுடைய சாஸனங்கள்

22

னாட்டில் இருந்ததாக யுவன்சுவங் கூறுகிறான். மகாவம்சத்தின்படி இவ் விருவரும் அசோகனுடைய மக்களாம்.

ஏறக்குறைய அசோகன் காலத்தது என்று அனுமானிக்கப்படும் சிற்பம் ஒன்றில் சிலோனில் பௌத்த மதத்தைப் பிரசாரஞ்செய்த விஷயம் குறிப்பிட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. ஸாஞ்சி ஸ்தூபத்தின் ஓர் வாசலின் உத்தரக்கல்லில் உயரமான ஓர் மனிதன் யானையிலிருந்து இறங்குவதையும் போதிலிருஷத்தின் கிளை அம்மரத்தினின்று ஒடிக்கப்பட்டு அம்மனிதனிடம் கொடுக்கப்படுவதையும் விளக்கிக்காட்டும் சிற்பம் ஒன்றுண்டு. போதிவிருக்ஷத்தின் கிளை சிலோனுக்கு தேவர் பிரியனான திஸ்ஸன் என்ற அரசன் காலத்தில் கொண்டுவரப்பட்ட செய்தி சிலோன் இதிகாஸங்களில் மிக விமரிசையாகக் கூறப்பட்டிருக்கிறது. முன் கூறப்பட்ட சிற்பம் இந்தச் சம்பவத்தின் அறிகுறியா யிருக்கலாமன்றோ ?

அசோகனால் தர்மப்ரசாரம் செய்யப்பட்ட நாடுகளுள் மிக 
வெகு தூரத்
துள்ள ஐந்து
அரசருடன் உறவு.

முக்கியமானவை அறுநூறு யோஜனைக்கப்பாலுள்ள ஐந்து அரசரின் நாடுகள். ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்காக் கண்டங்கள் ஒன்றுக்கொன்று சந்திக்கும் பிரதேசங்களை ஆண்டுவந்த அரசர் இவர். இங்கு கிரீக்கு ஜாதியாருடைய நாகரிகம் மிகுந்திருந்தது, அலக்ஸாந்தர் என்ற மாஸிடோணியா தேசத்துப் பராக்ரம வீரன் கி. மு. 335-ல் தனது திக்விஜயத்தை ஆரம்பித்து நூற்றுக்கணக்காய் ராஜ்யங்களை ஜயித்து இந்தியாவுக்கும் படையெடுத்துவந்த விவரங்கள் சாதாரணமாய்த் தெரிந்தவையே. அவ்வீரன் பராக்கிரமத்தால் ஏற்பட்ட ஏகாதிபத்யம் அவனுடைய முடிவுடன் சீர்குலைந்தது. அலக்ஸாந்தரின் முக்கிய போர்வீரர்கள் அப்போது அந்த