அசோகனுடைய சாஸனங்கள்
24
அசோகனுடைய சாஸனங்களில் ஐந்து அரசர் கூறப்பட்டிருப்பது
இதிலிருந்து
கிடைக்கும்
ஸமகாலத்துவம்
பூர்விக இந்திய சரித்திரத்தின் காலநிர்ணயத்துக்கு மிகவும் முக்கியமான ஆதாரமாயிருக்கிறது. இந்த ஐந்து அரசர்களும் சேர்ந்து ஜீவித்திருந்தது நான்கு வருஷங்கள் மட்டுமே. இத் தூரதேசங்களுக்கு அசோகன் தூதரை அனுப்பியது தனது பன்னிரண்டாவது பட்டாபிஷேக வருஷத்திலென்று சாஸனங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. அதனால் அசோகனுடைய பன்னிரண்டாவது வருஷத்தை நாலு வருஷங்களுக்கு அதிகம் முன்பின் போகாமல் நாம் நிச்சயிக்கலாம். கி. மு. 258-௵ல் அசோகனும் இந்த ஐந்து அரசர்களும் ஒருமித்து ஜீவந்தராயிருந்தனர். இதை ஸமகாலத்துவம் (Synchronism) என்று சொல்லலாம். இந்த ஸமகாலத் துவத்திலிருந்து அசோகனுடைய ராஜ்யபாரகாலத்தையே நாம் தீர்மானிக்கலாம். இதல்லாமல் மற்றொரு ஸமகாலத்துவமும் பூர்விக இந்திய சரித்திரத்துக்கு மிகவும் முக்கியம் ; அதாவது கிரீக்கு பாஷையிலுள்ள அலக்ஸாந்தர் வீரன் சரிதைகளில் ஸந்திரகோட்டாஸ் என்ற இந்திய அரசன் பெயர் கூறப்பட்டிருப்பது. இந்த ஸ்ந்திரகோட்டாஸ் முத்திராராக்ஷஸம் என்ற சம்ஸ்கிருத நாடகத்தின் பாத்திரனான சந்திரகுப்தன் என்ற மோரிய வம்ச ஸ்தாபகன் தான் என்ற அனுமானம் பூர்விக இந்தியா சரித்திரத்தில் முதலாவது ஏற்பட்ட ஸமகாலத்துவம். இரண்டாவதாக ஏற்பட்ட ஸமகாலத்துவம் அசோகன் சாஸனங்களொன்றில் ஐந்து தூரதேசத்து அரசர்கள் கூறப்பட்டிருப்பதே.
அசோகனுக்கு ஐந்து மேனாட்டு அரசருடன் ஏற்பட்ட உறவானது இந்திய சரித்திர ஆராய்ச்சிக்கு ஓர்