பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அசோகனுடைய சாஸனங்கள்

தேசங்களில் கி. மு. மூன்று, இரண்டு, ஒன்றாவது நூற்றாண்டுகளில் குணதிசை உலகம் குடதிசை உலகத்தோடு சந்தித்தது.

அசோகனின் பதின்மூன்றாம் ஆண்டிலும் இருபதாம் 
ஆஜீவகர்களுக்
குக் குகைகள்
செய்தல்

ஆண்டிலும் இப்போது கயையின் அருகில் காணப்படும் மூன்று குகைகள் வெட்டப்பட்டன. இந்தக் குகைகள் கடுந்துறவிகளாகிய ஆஜீவகர்களுக்கு தானம் செய்யப்பட்டவை. இதை நாம் அசோகன் ஆளுகையில் விசேஷ சம்பவமாகக் கொள்ளவேண்டியதில்லை. அவனால் செய்யப்பட்ட மற்ற பல தான தர்மங்களின் லக்ஷியங்கள் அழிந்துபோயின, இவை மட்டும் நிலை நிற்கின்றன, அவ்வளவே.

இருப்பத்தேழாவது இருப்பத்தெட்டாவது பட்டாபிஷேக 
ஸ்தம்ப
சாஸனங்களைப்
பிரசுரஞ்செய்தல்

வருஷங்களில் அசோகனுடைய ஏழு ஸ்தம்பசாஸனங்கள் வரையப்பட்டன. அசோகனுடைய அரசாட்சியின் தன்மையை அறிந்துணர இவை மிகவும் முக்கியமானவை. இவற்றில் ஏழாவது ஸ்தம்ப சாஸனம் விசேஷமாகக் குறிப்பிடத்தக்கது. இதில் அசோகனால் செய்யப்பட்ட எல்லாச் சீர்திருத்தங்களுடையவும் மதிப்புரை இருக்கிறது. இவ்வகை லிகிதங்கள் எழுதப்பட்டுள்ள ‘தூண்கள்’ அசோகனால் முன்னமேயே நாட்டப்பட்டிருக்கலாம். அவனுடைய முன்னோர்களும் இப்படிப்பட்ட ஸ்தம்பங்களை நாட்டியிருக்கலாம். அரசன் முடிசூடிய இருபத்தோராம் வருஷத்தில் நடந்த தீர்த்தயாத்திரையின் ஞாபகச்சின்னமாக நாட்டப்பட்ட ஸ்தம்பங்களைப்பற்றி முன்னே கூறினோம். சில ஸ்தம்பங்கள் முதலில் கீர்த்தி ஸ்தம்பங்களாக நாட்டப்பட்டிருக்-