பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அசோகனுடைய சாஸனங்கள்

யும் விசேஷமாகக் குறிப்பிடத்தக்கனவாம். ஸ்ரீ. வின்ஸென்ட் ஸ்மித் என்ற பிரசித்திபெற்ற இந்திய சரித்திர ஆசிரியர் அக்பரையும் அசோகனையும் சீர்தூக்கி எழுதுகிறார்.[1] மதங்கள் விஷயத்தில் இவ்விருமன்னரின் சமதிருஷ்டியும் எச்சமயத்தாருக்கும் ஒன்று போல் சுரந்த அன்பு மாதரவும் மெச்சத்தக்கனவே. இவ்விஷயத்தில் இவ்விரு சுடர்களின் ஒளியும் நிகரெனினும், புறச்சமயங்களைப் பழிப்பவரிடையில் தோன்றி வளர்ந்த அக்பருடைய சமதிருஷ்டி அசோகனதைவிட விசாலமும் பெருமையுமுடையதென நாம் ஒப்புக்கொள்ளலாம். ஆயினும், முன் கூறிய ஆசிரியர் குறிப்பிடுவதுபோல, அக்பர் புத்திக்கு யுத்தங்களைத் தவிர்த்து தர்மத்தைமட்டும் பரவச்செய்வதென்பது பேதைமையாகத் தோன்றுமேயன்றி வேறில்லை. அசோகனோ, அயல் நாடுகளைக் கைப்பற்றுவதின் கொடுமையைத் தனது ஆளுகையின் தொடக்கத்திலேயே உணர்ந்தான். அக்பர் அசோகனுடைய பதின்மூன்றாவது சாஸனத்தைப் படித்திருந்தால் அவனைப் பயங்கொள்ளியாகவே கருதியிருப்பர். அரசர் பூமியில் பேராசையைத் தவிர்க்கவேண்டுமென்பது அக்பர் புத்திக்கே எட்டவில்லை. இக்கசப்பான அரிய உண்மை தற்காலத்தில் பல ராஜாங்க நிபுணர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது, இவ்வுண்மையை உணர்ந்ததே அசோக ராஜனுடைய அழியாப் புகழாம்.

அரசனாயிருந்தும் மனிதனுக்குரிய லக்ஷியங்களை மறக்காது, சுக போகங்களில் மயங்காது வாழ்ந்துவந்த மன்னர் மிகச் சிலரே. சரித்திரமூலமாகிய ஆதாரங்களில் மிகுந்த வித்தியாசமுள்ளபோதிலும், கபடமற்ற உள்ளத்திற்கும் எல்லோர் காட்சிக்கும் எளியனாயிருக்க

  1. The Oxford History of India by V. A. Smith p. 115.