பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அசோகனுடைய சாஸனங்கள்

கௌதம புத்தர் வாழ்ந்திருந்த நாளளவும் அவர்தாமே பௌத்த 
பௌத்த சங்க
சபைகள்

ஸங்கத்தின் அதிபதியாகவும் குருவாகவும் எல்லா பௌத்தத் துறவிகளுக்கும் மலையிலக்காகவும் இருந்தார். அவர் ஸங்கத்தைச் சேர்ந்தோருடைய நடையுடைபாவனைகளை நேர்வழியில் நிறுத்தப் பல விதிகளை ஏற்படுத்தினாராயினும் துறவிகளின் சுதந்திரத்தை அனாவசியமாய்க் கட்டுப்படுத்தவில்லை. பிக்ஷுக்கள் சதா ஆசாரியர்களை வழிபட்டு அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது தான் நன்றென்று கௌதமர் நினைக்கவில்லை. எவரும் தாமே தமக்கு வழிகாட்டியாயிருக்கவேண்டுமென்று அவர் தமது சரமோபதேசத்தில் எல்லோரையும் வற்புறுத்துகிறார். ஸங்கத்தைச் சேர்ந்தோர் யாவரையும் ஒரு சமூகத்தாராகக் கட்டுப்படுத்தவேண்டுமென்று அவர் முயற்சி செய்யவில்லை ; ஆயினும் ஒற்றுமை உணர்ச்சியை உண்டு பண்ணக்கூடிய ஏற்பாடுகள் ஸங்கத்தில் இல்லாமலிருக்கவில்லை. தங்களுக்கிடையில் பரஸ்பர வெகுமானமும் நம்பிக்கையும் வளருவதற்காக “பாடிமோக்ஹம்" என்ற சடங்கு ஒவ்வொரு பௌர்ணமியன்றும் நடந்து வந்தது, பௌர்ணமியன்று இரவு ஓரிடத்தில் தங்கியிருக்கும் பிக்ஷுக்கள் எல்லோருங்கூடி தங்கள் தங்கள் நடத்தையில் சம்பவித்த குற்றங் குறைவுகளை மற்றோருக்குக் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொள்வது வழக்கம்; இதன்றி வேறு விதத்தில், ஒரு துறவி மற்றத் துறவிக்குக் கீழ்ப்படியவேண்டிய அவசியமிருக்கவில்லை.

கௌதமபுத்தர் வாழ்ந்திருந்த நாளளவும், அவருடைய அடுத்த சீஷர்கள் காலத்திலும் புத்தரின் பெருமையும் பரிசுத்தமும் பௌத்த ஸங்கத்தைப் பிளவுகளிலிருந்து காப்பாற்றின. காலக்கிரமத்தில் இந்த ஒற்றுமை