பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அசோகனுடைய சாஸனங்கள்

ளால் மனப்பாடஞ் செய்யப்பட்டன. இந்து மதக் கிரந்தங்களைப் போலவே பௌத்தப் பிரபந்தங்களும் வாய்மொழியாகக் குருசிஷ்ய பரம்பரையில் நிலைநின்று வந்தன. ஆனால் பிரதம சீஷர்களுக்குள்ளேயே அபிப்பிராய பேதங்கள் இருந்தமைபற்றி பௌத்தருக்குள் பிளவுகள் ஏற்படத்தொடங்கின. கௌதமரிறந்த நூறு வருஷங்களுக்குப் பிறகு கொள்கை வேறுபாடுகளும் ஆசார வேறுபாடுகளும் உண்மையான மதப் பிரபந்தங்கள் எவையென்ற சமுசயமும் மேலிட்டிருந்தன. இக்குறைகளைப் பரிகாரஞ்செய்ய மதத் தலைவர்கள் மற்றொரு மகா ஸபை கூட்டினர். இந்த இரண்டாவது பௌத்த மகா ஸபை வெய்சாலியில் நடந்தது. ஸங்கத்தில் ஏற்பட்டிருந்த பல உட்பிரிவுகளால் ஸபையின் நடவடிக்கைகள் முற்றுப்பெறவில்லை. அதன் வேலை சிதைந்தது ; பல எதிர் ஸபைகள் கூடின ; பிரபந்தங்களை நிச்சயிப்பதும் திரட்டுவதும் சாத்தியமில்லாமல் போயின. இரண்டாவது ஸபையால் குழப்பம் அதிகரித்ததல்லாமல் வேறு குண முண்டாகவில்லை.

ஆகவே அசோகன் சிங்காதனமேறிய காலத்தில் பௌத்த ஸங்கத்தில் குற்றங்கள் மலிந்திருந்தன. ஆசாரங்களிலும் கொள்கைகளிலும் வியவஸ்தை இருக்கவில்லை. மகப் பிரபந்தங்கள் எவையென்று தீர்மானமாகவில்லை. இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்த பிக்ஷுக் சுட்டங்கள் தங்களுக்கு உசிதமென்று தோன்றிய செய்கைகளையும், சரியென்று தோன்றிய கொள்கைகளையும் கைக்கொண்டிருந்தனர். பாடிமோக்ஹம் என்ற சடங்கு கூடச் சரியாக எங்கும் நடைபெற்று வரவில்லையென்று ஸார்நாத் சாஸனத்திலிருந்து நாம் ஊகிக்கலாம்.

மூன்றாவது பௌத்த மகா ஸபை அசோகனுடைய