பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அசோகனுடைய சாஸனங்கள்

றுமையைப் பொருட்படுத்தாமல் தர்மம் என்பது 
அசோகனுக்
க்கு பின் பௌத்
த மதத்தில் ஏற்
பட்டமாறுதல்கள்

நிர்வாணத்தையடையும் வழியென்று ஸ்தாபித்தனர். அதனால் பௌத்த ஸங்கத்தில் இல்லறத்தாருக்கு இடமில்லாமற் போயிற்று. அசோகன் இக்குறையை உணர்ந்தான்போலும். அதனால் அவன் தர்மம் என்பது ஸன்மார்க்கவழியே யன்றி வேறில்லையென்று முறையிட்டான். ஆயினும் அவன் இல்லறத்தாருக்குப் பௌத்தர் என்ற பெயர்கொடுத்து அவரை ஒரு பிரத்தியேக சமூகத்தாராகச் செய்யவில்லை, தற்காலம் கிறிஸ்து முகம்மதிய மதங்களைப்போல பௌத்தமதம் பல குடும்பத்தாருக்குப் பிறப்பு இறப்பு கலியாணம் முதலிய சடங்குகளை நடத்திவைக்கப் புரோகிதர்களைத் தயார் செய்யவில்லை. அதனால் நாளடைவில் பத்தருடைய லன்மார்க்க போதனை மட்டும் இந்தியாவின் ஜனங்களுடைய வாழ்வில் ஊள்ளூறப்பரவி யதனுடன் கலந்து போயிற்று.

இந்தியாவின் புறத்தில் புத்தருடைய மதம் வேறு விதம் விகஸித்தது. திபெத் சீனா ஜப்பான் என்ற நாடுகளில் பௌத்தமதம் நிரீச்வரவாதம் அனாத்மவாதம் முதலிய கொள்கைகளை இழந்து கடவுளிடம் நம்பிக்கையுள்ள மதமாய் மாறிற்று. பத்தன் என்ற பதம் முன் ஒரு காலத்திலிருந்த ஞானியின் பெயராயிராமல் யாவரும் தமது முயற்சியால் அடையக்கூடிய ஆன்மீய நிலைமையின் பெயராக சேர்ந்தது. கௌதம புத்தருக்கு முன்னும் பின்னும் அநேகர் புத்தராயிருக்கின்றனர் என்ற கொள்கை பரவிற்று. பூர்வபுத்தர் இருந்த விஷயத்தை அசோகனும் ஒப்புக்கொண்டான் என்பது முன்னே சொன்னோம். இப்படி, படிப்படியாக மஹாயானம் என்ற