பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகன் அரசாட்சி

43

பௌத்தமதபேதம் உண்டாயிற்று. புத்தன் என்ற பதம் கடவுளின் வேறு ஒரு பெயராகவும் பரிணமித்தது. சிலோன் தீவிலும் பர்மாவிலும் தற்காலம் பரவியிருக்கும் பௌத்தமதத்துக்கு ஹீனயானம் என்று பெயர். ஹீனயானமதத்தார் மனோதத்துவங்களைப் பற்றியவரையிலும் பிராசீன பௌத்தக் கொள்கைகளையே போதித்து வருகின்றனர்.

IV. அசோகன் அரசாட்சி

நாம் மௌரிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சிமுறையைப் 
அசோகன்
துரைத்தனம்
முன்னிருந்ததன்
தொடர்ச்சியே

பற்றி விரிவாக எழுதக்கூடும். சந்திர குப்தனுடைய காலத்தில் அவனுடைய ராஜதானியில் பல வருஷங்களாக வசித்துவந்த யவன தூதன் மெகாஸ்தனிஸ் தன் சுதேசம் சென்றதும் தான் கண்டனவும் கேட்டனவுமான செய்திகளைத்திரட்டி, இந்திய விவரணம், என்ற புஸ்தகத்தை அமைத்தான். இதன் சில பாகங்களே இப்போது, நமக்கு அகப்படுகின்றன ; ஆயினும், மோரிய அரசாட்சியின் தன்மை, இந்திய ஜனங்களின் ஒழுக்க வழக்கங்கள் நாட்டின் நீர் நிலவளம் முதலிய பல விஷயங்களை நாம் அவற்றிலிருந்து உணர்ந்து கொள்ளலாம். கௌடல்யன், சாணக்கியன், விஷ்ணுகுப்தன் என்று பலவாறு பெயர் கூறப்படும் ராஜதந்திர நிபுணன் சந்திர குப்தனுடைய மந்திரியாயிருந்தானென்றும், அவனது சகாயத்தாலேயே சந்திரகுப்தன் சிங்காதனத்தைக் கைப்பற்றினானென்றும், கௌடல்யனால் இயற்றப்பட்டதென்று மதிக்கப்படும் அர்த்தசாஸ்திரம் என்ற ஒரு நூல் உண்டென்றும் நாம் முன்னே கூறினோம். பிற்காலங்களில் இந்நூல் தர்ம