பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகன் அரசாட்சி

45

வில்லை. ராணுவ பலத்திலும், நிர்வாக அதிகாரிகளின் திறமையிலும், தேசத்தில் வசித்துவந்த அந்நியநாட்டாரை ஆதரித்துப் போற்றும் நாகரிகத்திலும், வியாபார அபிவிர்த்தியிலும், கைத்தொழிற்பெருக்கத்திலும் அசோகனது ஆளுகை முன்னிருந்ததை விடக் கொஞ்சமுங் குறைவடையவில்லை. பாடலிபுரத்தைச் சுற்றிய மத்தியப்பிரதேசத்தைத் தவிர்த்து மற்றப் பாகங்கள் நான்கு மாகாணங்களாய்ப் பிரிக்கப்பட்டு இளவரசர் பலரால் காப்பாற்றப்பட்டுவந்தன. அசோகனுடைய காலத்தில் இம்மாகாணங்களாவன -1. தக்ஷசிலா அல்லது தக்கசிலையைத் தலைநகராகவுடைய வடமேற்கு மாகாணம். 2. உஜ்ஜெயினியைத் தலைநகரமாகவுடைய மாளவதேசம் 3. தொஸாலியைத் தலைநகரமாகக்கொண்ட கலிங்கம். 4. சுவர்ணகிரியைத் தலைநகராகக்கொண்ட தக்கணமாகாணம். இம்மாகாணங்களில் காரிய நிர்வாகத்திற்குப் பல மந்திரிகளும் படிப்படியாகப் பலவித அதிகாரிகளும் இருந்தனர். மெகாஸ்தனிஸ் சொல்லியிருப்பதுபோல, முக்கியமான நகரங்களிலும் ராணுவத்திலும் ஐந்துமெம்பர்கள் அடங்கிய கமிட்டியார் வேலை செய்து வந்தனர். ஏகாதிபத்தியத்தின் துரைத்தனமானது பல சக்கரங்களையுடைய பெரிய இயந்திரத்தை யொத்திருந்தது.

அசோகனுடைய துரைத்தனம் மேற்கூறியபடி பல 
அரசனது புது
நோக்கங்கள்

விதத்தில், முன்னே ராஜ்யத்தில் ஏற்பட்டிருந்த துரைத்தனத்தின் தொடர்ச்சியாயிருந்தபோதிலும் அரசியலில் அவனுக்குப் புதிய நோக்கங்கள் இருந்தன. அவன் துரைத்தனம் என்ற இயந்திரத்தில் அனாவசியமாய்க்கையிட்டுக் கஷ்டங்களில் சிக்கிக்கொள்ளவில்லை யாயினும் துரைத்தனம் என்பது உயிர் உணர்வு,