பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகன் அரசாட்சி

47

அரசியலுக்கு இயல்பு என்பது கௌடல்யனுடைய கொள்கைபோலும். அவன் அரசர்களை தேவர்களுக்குச் சமானமாக உயர்த்தி அவர்களுக்குச் சாதாரண மனிதர்க்குரிய தர்மநியாயங்கள் அமையா என்று உரைத்தான். அசோக சாஸனங்களிலுள்ள பல வாக்கியங்கள் இக்கொள்கையை மறுத்துரைப்பதற்கு எழுதப்பட்டவை போல் ஒலிக்கின்றன. ஜனங்களின் நடத்தைக்கு மாதிரியாக வாழவேண்டுவது அரசன் கடமை என்று பல இடங்களில் கூறப்படுகின்றன (உதாரணம் ; இரண்டாம் ஸ்தம்ப சாஸனம், ஏழாம் ஸ்தம்ப சாஸனம்.) “முன்னே மனிதர் தேவர்களை அனுசரித்து ஒழுகவில்லை, இப்பொழுது ஜம்பூத் தீபத்தில் மனிதர் தேவர்களை அனுசரித்து ஒழுகுகின்றனர். இது என்னுடைய உழைப்பின் பயன்...... சிறியோரும் பெரியோரும் (நல்வழியில்) உழைத்து வரவேண்டும்" என்று அசோகன் தனது பிரஜைகளுக்கு வற்புறுத்துகிறான் (முதல் உபசாஸனம்).

பதினான்கு முக்கிய சாஸனங்களில் பன்னிரண்டாம் சாஸனம் 
சமரஸபாவம்

பாவத்தின் லக்ஷணத்தையும் அதன் அவசியத்தையும் அதற்கு விரோதமான மனப்பாங்கையும் நன்றாக விளக்குகிறது. எல்லாச் சமயங்களிலும் உயர்ந்த கொள்கைகளும் உயர்நன்னெறியில் ஒழுகும் மானிடர்களுமுண்டென்று மற்றச் சாஸனங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது, பன்னிரண்டாம் சாஸனம் பொன்னெழுத்திற் பொறிக்கும் தகைமைத்து. அசோகன் எல்லா மதங்களையும் வெகுமதித்து, பல மதத்தினரையும் ஒன்றுபோல் காப்பாற்றிவந்தான். ஜனங்களிடையில் பரஸ்பர சினேகமும் ஒற்றுமையும் வளர்ந்துவந்தன. தன் அயலான் எம்மதத்தானாயினும்சரி அவனுடன்