பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அசோகனுடைய சாஸனங்கள்

அசோகனால் ஜனங்களுக்கு நியாயம் கிடைக்குமென்று உறுதிமொழி கூறப்பட்டது.

“அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை” - (56-5)

என்ற திருவள்ளுவர் வசனத்தின் உண்மையை அசோகன் உணர்ந்தான் போலும். அநியாயமான, சிக்ஷை, சிறைசெய்தல் முதலிய குற்றங்கள் அரசாட்சி செய்வோருக்கு இயல்பே. இவ்வித குற்றங்களை நிவிர்த்திசெய்யும். கடமையை அசோகன் தான் புதிதாக நியமித்த தர்ம மகாமாத்திரர் என்ற அதிசாரிகளிடம் ஒப்பித்தான் : ராஜ்யத்தில் வேலைபார்த்து வந்த பலவித அதிகாரிகளுடைய கடமையில் கவனமின்மை அல்லது கள்ளம் நேருமாயின் அது சக்கரவர்த்திக்குச் செய்யப்படும் பெருந்துரோகமென்று அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர். அவர்கள் தம் நிலைமை தவறி நடக்கிறார்களாவென்று தெரிந்து கொள்ள ரகசியமாக ஒற்றர்கள் பலர் அனுப்பப்பட்டனர். சக்கரவர்த்தி ஜனங்களுக்கு அளித்த வாக்குத்தத்தங்களும் பிரதிக்ஞைகளும் அடிக்கடி உரக்கப் படிக்கப்பட்டன ; கற்களில் எழுதி விளம்பரம் செய்யப்பட்டன (கலிங்கசாஸனம்). “நகர அதிகாரிகள் அகாரணமாய் மனிதரைச் சிறைசெய்தல் இம்சித்தல் முதலிய தீய வழக்கங்களைத் தவிர்ப்பதற்காக இச்சாஸனம் வரையப்பட்டது”. இப்படிக்கு ஒரு சாஸனத்தின் முடிவில் வரைந்திருப்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

தற்காலத்திலும் முற்காலங்களிலும் மண்ணை உழுது 
விவசாயம்

பயிரிட்டு ஜீவனஞ் செய்வோரே தேசத்தின் க்ஷேமத்திற்கு அஸ்திவாரம் போன்றவர். அசோகன் வேளாண்மக்களின் வேண்டுதல்களை மறக்கவில்லை யென்பதற்கு அவனுடைய