52
அசோகனுடைய சாஸனங்கள்
அசோகனால் ஸ்தாபிக்கப்பட்ட ஆலயங்களும் மடங்களும்
கட்டிடங்கள்
கி. பி நான்காம் நூற்றாண்டில் பாஹியன் என்ற சீன யாத்திரிகன் இங்கு வந்த காலத்திலேயே எண்ணிறந்தனவென்று கருதப்பட்டன. பௌத்த மதத்தாருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிரயோஜனப் படுகின்ற பல கட்டிடங்களும் ஸ்தாபனங்களும் அசோகனாற் செய்யப் பட்டன, பாடலிபுரத்தில் ஏறக்குறைய ஆயிரம் பிக்ஷுக்களுக்கு அன்ன வஸ்திரங்கள் அளித்து அவரைக் காப்பாற்றி வந்த அசோகாராமம் என்ற பௌத்த மடம் ஏற்பட்டிருந்தது. அதன் அருகிலுள்ள நாலந்தா என்ற ஊர் பல சாஸ்திரங்களும் கலை ஞானங்களும் தழைத்த பெரிய வித்தியாபீடமாய் விளங்கிற்று, தக்ஷசிலையின் கல்விப் புகழும் குன்றாது பெருகியது. ஜனங்களுக்கு இடையில் எழுதி வாசிக்கக் கூடிய திறமை அபூர்வமாயிருக்கவில்லை யென்பதற்கு அசோக சாஸனங்களே சான்றாகும்.
அசோகசாஸனங்களிற் பலவகை அதிகாரிகளின்
சாஸனங்களிற்
கூறப்படும்
அதிகாரிகள்
பெயர் கூறப்படுகின்றது. அதிகாரிகளின் பெயர் எவ்விதங்களில் வருகின்றது என்பதை ஓர் பட்டிகையில் எழுதி விளக்கலாம்.
சாஸனங்களிற் கூறப்படும் ராஜ அதிகாரிகள், |
இவர்களைக் குறிப்பிடும் சாஸனங்கள், |
1. | தர்மமகாமாத்திரர். | 5-ம் சாஸனம் 7-ம் ஸ்தம்பசாஸனம். |
2. | ரஜூகர் | 3-ம் சா. 4-ம் ஸ்தம்பசா. |
3. | ப்ராதேசிகர் | 3-ம் சாஸனம். |
4. | மகாமாத்திரர். | ஸார்நாத் சா. இராணிகாருவாகியின் |
| லிகிதம். கலிங்க சாஸனங்கள். | |
| 6-ம் சாஸனம். முதல் உப சா. | |
| 7-ம் ஸ்தம்பசாஸனம். |