பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்காலத்துப் பழம்பொருள்கள்

59

களிற் கண்களுக்குத் தென்படாத யக்ஷர் கின்னரர் போன்ற தெய்வங்களின் உதவியைக்கொண்டு அரசன் எண்பத்து நாலாயிரம் ஸ்தாபனங்களைக் கட்டுவித்ததாகக் கூறுகிறான். அசோகனால் கட்டப்பட்டவை ஸ்தூபங்கள் மட்டுமல்ல ; காச்மீரத்தின் தலைநகரமாகிய ஸ்ரீநகரும் நேப்பாளத்தின் தலைநகரமாகிய லலிதாபட்டணமும் அசோகனால் ஸ்தாபிக்கப்பட்டதென்று முன்னே சொன்னோம். நாலந்தாவும் இக்காலத்தில் உற்பத்தியாயிற்று.

பாட்னாவின் சமீபம் அசோகன் அரண்மனை இருந்ததென்று 
இவற்றின்
தற்கால
அறிகுறிகள்

சமீபகாலத்தில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. 1913 –ல் பம்பாய் நகரத்துக் கோடிஸ்ரீமான்களாகிய டாட்டா வம்சத்தாரின் பண உதவியின் காரணமாக அங்கே புராதன வஸ்து ஆராய்ச்சி தொடங்கப்பட்டது, தலைஸ்தானத்துள்ள ஸபாமண்டபம் ஆஸ்தான மண்டபம் முதலிய கட்டிடங்களின் அடையாளங்கள் பல தரையைத் தோண்டிப் பார்த்ததில் அகப்பட்டன. பாரசீக தேசத்துப் பழைய அரண்மனைகளின் சிற்ப விசேஷங்கள் இங்கும் காணப்படுகின்றன ; ஆதலால் இங்குள்ள வேலைப்பாடு பாரஸீக சிற்பிகளுடையதாயிருக்க வேண்டுமென்று அனுமானிக் கப்படுகிறது.

ஒரு காலத்தில் அசோகனுடைய கட்டிடங்கள் இந்தியாவின் எல்லாப்பாகங்களிலும் மிகுந்திருந்தன. அசோகனுக்குப் பிற்காலத்தில் மகததேசத்துக்கு பிஹார் என்று பெயர் வந்த காரணம் அந்நாடு முழுவதும் பௌத்த விஹாரங்களால் நிறைந்திருந்தமையே எனலாம். ஆனால் தற்காலம் அசோகனால் கட்டப்பட்ட கட்டிடங்கள் இவ்வுலகத்திலுள்ள பல மாயைகளைப்போல