உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனுடைய சாஸனங்கள்

60

அழிந்து மறைந்துபோயிருக்கின்றன. அவற்றின் அறிகுறியாய்க் கிடைத்துள்ள புராதன வஸ்துக்களை இங்கு, விவரிப்போம்.

ஸ்தூபம் என்றால் பௌத்த மதத்தைச் சேர்ந்த பெரியோருக்குக் 
ஸ்தூபங்கள்

கல்லினால் கட்டப்படும் சமாதி. இதை, பௌத்தர் பள்ளி யென்றும் கூறலாம். முனிவரின் சாம்பலை ஸ்தூபத்தின் மேற்புறத்தில் அடக்கம் செய்வார்கள், உருவத்தில் ஸ்தூபம் ஒரு பெரும் கோளத்தின் பாதியை உயர்ந்த பீடத்தின் மேல் கவிழ்த்ததுபோலிருக்கும். ஸ்தூபம் கருங்கல்லினாலோ சுட்ட செங்கற்களாலோ கட்டப்பட்டதாயிருக்கலாம். ஸ்தூபத்தின் புறமே விளக்கு மாடங்களும் வேறு அலங்காரங்களும் இருக்கும். மேற்புறத்தில் இங்கிலீஷ் எழுத்து T போன்ற அடையாளமும் அதற்கு மேல் பரந்த ஒரு குடையும் நாட்டப்பட்டிருக்கும். தொண்டர் ஸ்தூபத்தைப் பிரதக்ஷிணம் செய்துவர பிராகாரமும், பிராகாரத்தின் நான்கு புறமும் பெருங்கற்களினால் செய்யப்பட்ட வேலியும் வேலியின் புறமே கோபுரவாசல்களைப்போல மிக்க அலங்காரமாய்ச் செய்யப்பட்ட வாசல்களும் சிதைவுபடாத ஸ்தூபங்களில் காணலாம் இப்படிப்பட்ட ஸ்தூபம் ஒன்று நல்ல ஸ்திதியில் ஸாஞ்சி என்ற ஊரில் இருக்கிறது. இவ்வூர் மத்திய இந்தியாவைச்சேர்ந்த போபால் சம்ஸ்தானத்தில் உள்ளது. அங்கு இரண்டு மூன்று ஸ்தூபங்கள் இருக்கின்றன. அவற்றிற் பிரதானமான ஸ்தூபம் அசோகன் காலத்தது என்று அனுமானிக்கப்படுகிறது. வாசல்கள் பின் கட்டப்பட்டவையாயினும் முதலாவது க்ஷேத்திரம் பூராவும் மரத்தினாற் கட்டப்பட்டிருக்கலாம். பிற்காலத்து அரசர் தமக்கு இயன்றவாறு இதேவேலைகளைக்கற்களில் செய்திருக்கலாம்.