பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அசோகனுடைய சாஸனங்கள்

64

றன. உட்புறம் மிக நன்றாய் இழைக்கப்பட்டிருக்கிறது.

அசோகனால் நாட்டப்பட்ட ஸ்தம்பங்கள், அவனுடைய அரசாட்சிக்கு மிக உயர்ந்த ஞாபகச் சின்னங்களென்று சொல்லலாம், அசோகன் காலத்துக்கு முன்னமே இப்படிப்பட்ட ஸ்தம்பங்கள்
ஸ்தம்பங்கள்
இருந்தனவென்று சாஸனங்களிலிருந்து தெரியவருகிறது.[1] அசோகன் காலத்துக்குப் பின்னும் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்தம்பங்கள் பல உள்ளன. நூறு வருஷங்களுக்கு முன் கூட இப்போதிருப்பதிலும் பல அதிகமாயிருந்தன. இத்தகைய தூண்களின் பெருமையைச் சாதாரண ஜனங்கள் உணராமல் அவை தாறுமாறாய் உபயோகிக்கப்பட்டன. ஸ்தம்பங்களின் துண்டுகள் சாலைகளில் பரப்பும் சரளை அடித்துச் சமப்படுத்த றோலர்களாகவும் கரும்பாலையில் உரல்களாகவும் உபயோகப்படுத்தப்பட்டன.

இப்போது காணப்படும் அசோக ஸ்தம்பங்கள் பன்னிரண்டு. அவற்றில் பத்து ஸ்தம்பங்களில் அசோகனுடைய லிகிதம் காணப்படுகிறது. இரண்டில் ஒரு லிகிதமுமில்லையாயினும் ஸ்தம்பங்கள் அசோகன் காலத்தவையே. ஹிந்துஸ்தானப் பிரதேசத்துக்கு வெளியில் எங்கும் அசோகனுடைய ஸ்தம்பங்கள் கிடைத்தில.



அசோக ஸ்தம்பங்களின் விவரணம் அங்கு காணப்படும் லிகிதங்கள்,

1. டில்லி - தோப்ரா ஸ்தம்பம்..  ஸ்தம்பசாஸனங்கள் 1-7
2. டில்லி - மீரத் ஸ்தம்பம். 1-6
3. பிரயாகை ஸ்தம்பம்.  ஸார்நாத் சாஸனத்தின்
 பகுதி.ராணிகாருவாகியின்
 லிகிதம், ஸ்தம்பசாஸனங்
 கள்1-9


  1. முதல் உபசாஸனம் ரூபநாத் பாடம், 7-ம் ஸ்தம்பசாஸனம்.