பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அசோகனுடைய சாஸனங்கள்

அசோகன் அரண்மனையும் மற்றக் கட்டிடங்களும் இந்திய சிற்பிகளின் வேலையல்லவென்றும் கட்டிடங்களின் வேலைப்பாட்டில் இந்தியாவுக்கு அந்நியமான தேசங்களுக்குரிய அலங்காரங்கள் காணப்படுவது இதற்குச் சான்று என்றும் அபிப்பிராயங்கள் புராதன வஸ்துசாஸ்திரிகள் கூறுகின்றனர். நாம் இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், ஸ்தம்பங்களிலும் கட்டிடங்களிலுமுள்ள அலங்காரங்கள் இந்தியாவுக்கு அந்நியமானவை யென்று ஸர்வ ஸம்மதமாய் நிரூபிக்கப்படவில்லை. எல்லாத் தேசங்களுக்கும் இயற்கையான ஸங்கீதமும் இலக்கியமும் இருப்பதுபோலச் சிற்பமும் இயற்கையாகவே ஏற்படுகிறது. அடுத்தது காட்டும் பளிங்குபோல சிற்பங்களும் அந்தந்த நாட்டாரின் வாழ்வையும் மனோபாவங்களையும் பிரதிபலிக்கச்செய்கின்றன. இந்தியாவுக்குமட்டும் இப்படிப்பட்ட சுயமான சிற்பம் இல்லையென்று சொல்ல முடியுமா?

இந்தியா கவர்ன்மெண்டின் புராதனவஸ்து பரிசோதகரில் முக்கியராகிய டாக்டர் மார்ஷல் துரையும் அசோகன் காலத்துச் சிற்பம் அந்நிய மனிதரின் வேலையென்று மதிக்கின்றார் ; ஆனாலும் சிற்பங்களின் வேலைப்பாட்டை அதிகமாக மெச்சி எழுதுகிறார். அவர் ஸார்நாத் ஸ்தம்பத்தைப் பற்றி எழுதியிருப்பது பின் வருமாறு : “ பூர்வ காலத்து வேலைகளுள் இவ்வளவு உயர்ந்த மனோதர்மமும் சிற்பத் திறமையும் காணப்படும் வேலை வேறு எத்தேசத்தும் கிடையாது என்று நான் சொல்லத் துணிகின்றேன்.” இந்த மதிப்பு ஸார்நாத் ஸ்தம்பத்தின் சிகரத்துக்குமட்டுமன்று, பொதுவாக எல்லா அசோக ஸ்தம்பங்களுக்கும் அமையுமென்பது நமது துணிபு. அசோகன் காலத்துக்குமுற்பட்ட சிற்பம் அதிகமாக அகப்பட்டில; ஆயினும்