உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோக எழுத்து

71

உற்பத்தியானவையே. இவ்வுண்மை இந்த லிபிகள் 
ப்ராம்மி லிபி
இந்திய எழுத்துக்
களுக்கு மூலா
தாரம்
எல்லாவற்றையும் தாரதம்மியப்படுத்திப் படிக்கும் பக்ஷத்தில் எளிதில் விளங்கும், முலா எழுத்தின் வடிவம் எழுதுவதற்கு உபயோகிக்கப்படும் ஸாதனங்களுக்குத் தக்கபடியும் கருவிகளுக்குத் தக்கபடியும் லேககன் சரீர ஸ்திதிக்குத் தக்கபடியும் மாறுதல் அடைகின்றன. இக் காரணங்களால் எழுத்தின் வடிவம் காலதேசங்களை அனுஸரித்துப் பல மாறுதல்கள் அடைவதை நாம் சாஸன ஆராய்ச்சி மூலமாய் அறிந்துகொள்ளலாம். அசோகன் காலத்துக்கு நூறு வருஷங்களுக்குப்பின் ப்ராம்மி லிபியில் செங்குத்தான கோடுகள் மாறி வட்டங்களும் வளைவுகளும் ஏற்பட்டன. உதாரணமாக பட்டிப்ரோலு லிகிதத்தில் [1] இப்படிப்பட்ட வளைவுகளை நாம் அதிகமாய்க் காண்கிறோம், தமிழ், தெலுங்கு, கிரந்தம், மலையாளம், கன்னடம் என்ற தென்மொழிகளின் எழுத்துக்கள் ௸ லிகிதத்தில் காணப்படும் லிபியிலிருந்து உற்பத்தியானவை என்பதை தென் இந்தியாவில் வசிக்கும் நாம் கவனிக்கலாம்.

இந்தியாவின் பாஷைகள் அநேக ஆயிர வருஷங்களாக 
இந்திய பாஷைக
களுக்கு லிபி ஏற்
பட்ட விதம்

ஒருவித லிபியும் ஏற்படாமல் விர்த்தியடைந்து வந்தன. எல்லாவித கிரந்தங்களையும் சந்தை சொல்லி மனப்பாடம் செய்யும் வழக்கத்தால் இந்திய ஜனங்களுக்குத் தங்கள் பாஷையை எழுதுவதற்கு லிபி அவசியமில்லாமலிருந்தது. அப்படியாயின் இந்தியபாஷை

  1. 🞸 பட்டிப்ரோலு கிருஷ்ணா நதியின் முகத்தில் குண்டூர் ஜில்லாவிலுள்ள ஊர். பட்டிப்ரோலு லிகிதம் Epigraphia Indica, Vol. II. பக்கம் 323-ல் கண்டுகொள்ளவும், இதன் காலம் கி. பி. 200.