பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரியதர்சி அரசன் கல்வெட்டுக்கள்

73

என்ற பெர்ஸியாதேசத்து லிபி பரவிற்று, கரோஷ்டி இந்த லிபியிலிருந்து உற்பத்தியானது. கரோஷ்டி லிபி அசோகன் காலத்திலும் அதற்குப்பின் சில நூற்றாண்டுகள் வரையும் பஞ்சாபிலும் வடமேற்கு மாகாணத்திலும், ஸிந்துதேசத்திலும் பரவியிருந்தபோதிலும் கடைசியில் இந்தியாவிலும் அதன் புறமும் முற்றிலும் மறைந்து போயிற்று. மத்திய ஆசியாவிலுள்ள கோட்டான் ஒரு காலத்தில் வளமையும் நாகரிகமும் தழைத்த தேசமாயிருந்ததென்று முன்னே கூறினோம். கரோஷ்டி, லிபியில் எழுதப்பட்ட பௌத்தமதக் கிரந்தங்களும் மற்றக் கிரந்தங்களும் இத்தேசத்திலிருந்து சமீப காலத்தில் புதையலாய் அகப்பட்டிருக்கின்றன. இவை உலகத்துக்கு மிகவும் அருமையான செல்வமென்று வித்வான்களால் மதிக்கப்படுகின்றன.

VII. பிரியதர்சி அரசன் கல்வெட்டுக்கள்

அசோகன் நாளில் நடந்த சம்பவங்களைத் தீர்மானிக்கவும் 
இவற்றின்
பாகுபாடு

அரசன் காலத்தை நிர்ணயிக்கவும் அசோக சாஸனங்கள் எவ்வளவு முக்கிய ஆதாரங்களாயிருக்கின்றன வென்று நாம் நிரூபித்தாய்விட்டது. இனி இச் சாஸனங்களையே நோக்கவேண்டும். நமக்கு இதுவரையும் கிடைத்துள்ள அசோக லிகிதங்கள் முப்பத்து மூன்று. இவற்றில் பன்னிரண்டு லிகிதங்களில் அரசன் பட்டாபிஷேக வருஷம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இஃதன்றி வேறு சில லிகிதங்களிலும் கால நிர்ணயம் செய்வதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. இந்தச் சாஸனங்கள் யாவும் ராஜீய அதிகாரிகளுடையவோ மந்திரிகளுடையவோ வாக்கியங்களாயிராமல் அரசன் நாவிலிருந்து வந்த வாக்கியங்கள் என்-