பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனுடைய சாவலனங்கள்

80

லும் ந, லு, ஐ, ஒள என்ற உயிர் ஒலிகள் கிடையா. ஐயும், ஔவும், ஏயும், ஓவாக மாறுகின்றன. ரு, லு க்கள் மழுங்கிப்போகின்றன. தமிழில், மோக்ஷம் என்ற சொல்லை மோக்கம் என்று எழுதுவதும் கிருஷ்ணன் என்பதை, கண்ணன் என்று எழுதுவதும் பிராகிருத மொழியின் உறவினால் ஏற்பட்டதே.

இடத்துக்கு இடம் அசோக லிகிதங்களின் பாஷை எவ்வித வேறுபாடுகளுடையது என்பது பதினான்கு முக்கிய சாஸனங்களின் ஆறு பாடங்களையும் ஒப்பிட்டு நோக்குமிடத்து விளங்கும். ஸம்ஸ்கிருதமே என்று சொல்லக் கூடிய சொற்களும் இலக்கண ரூபங்களும் எல்லா இடங்களிலுள்ள லிகிசங்களிலும் காணப்படுகின்றனவென்றாலும் ஷாபாஸ்கர் ஹியில் காணப்படும் லிகிதங்கள் பாஷையில் ஸம்ஸ்கிருதத்துக்கு மிகவும் அடுத்ததா யிருக்கின்றன. ஆனால் இங்குள்ள லிபியில் பல குறைவுகள் உள. உதாரணமாக குறில் நெடில் என்ற வித்தியாசங்களே இங்கு காணப்படவில்லை ஆதலால் கிர்நார் பிரதியே வடமொழிப்பயிற்சி யுள்ளோருக்கு எளிதில் விளங்கக் கூடியதாயிருக்கிறது.

கிர்நாரிலும் ஷாபாஸ்கர்ஹியிலும் தவிர மற்றிடங்களில் ங, ஞ, ன, ந என்ற மூர்த்தன்னிய ஒலிகளைக் குறிப்பிடத் தனியான எழுத்துக்கள் கிடையா; எல்லாம் ந வாலேயே குறிப்பிடப்படுகின்றன. வடமேற்குப் பிரதிகளிற்போல கிர்நாரிலும் ர, ல என்ற இரு எழுத்துக்களும் உள; அதனால் இங்கு ராஜா என்ற சொல் லாஜா என்று எழுதப்படுவதில்லை. ஆயினும் கிர்நார் பிரதி வேறு அம்சங்களில் கீழ்த் திசை லிகிதங்களையும் தென் திசை லிகிதங்களையும் ஒத்திருக்கின்றது. உதாரணமாக, இவ் விடங்களிலுள்ள லிகிதங்களில் ச, ஷ, ஸ என்ற ஒலி வித்தியாசங்கள் கிடையா. வடக்குள்ள பாடங்களில் இவ்வுயிர்மெய்கள் உச்சரிக்கப்பட்டு பிரத்தியேகமாக எழுதப்பட்டிருக்கின்றன. இவைபோன்ற வேறுபாடுகளும், இலக்கண ரூபங்களில் சில வேறுபாடுகளும் இடத்துக்கு இடம் விகிதங்களிற் காணப்படுகின்றன.