பக்கம்:அசோகர் கதைகள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை ஒன்று

13

களாக வேடம் போட்டுக் கொண்டு வந்து விடுவார்கள்!" என்று துறவி சொல்லிக் கொண்டு வரும்போதே இளைஞன் இடையிற் பேசினான்.

"அப்படியானால் நான் எப்படித்தான் அசோக மன்னரைப் பார்ப்பது?" என்று கேட்டான்.

"இந்த நிலையில் நீ அவரைப் பார்க்க நினைப்பதே தவறு. உன்னால் அவரைப் பார்க்கவே முடியாது!" என்றார் துறவி.

"அப்படியானால் எந்த நிலையில் நான் அவரைப் பார்க்க முடியும்?"

"நீ உன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். சாதாரணப் பிச்சைக்காரனாக இல்லாமல் ஒரு வசதியுள்ள குடிமகனாக நீ மாற வேண்டும்" என்றார் துறவி.

"ஒன்றுமில்லாத நான் எப்படி வசதியுள்ளவனாக மாற முடியும்?"

"முடியும், கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டால்!"

"பணம் எப்படிச் சேர்ப்பது?"

"அதற்கு வேண்டுமானல் நான் வழி சொல்லித் தருகிறேன்" என்றார் துறவி.

"அது என்ன வழி?" என்று ஆவலோடு கேட்டான்.

"எனக்குத் தெரிந்த ஒரு தச்சன் இருக்கிறான். அவனுக்கு உதவியாக ஓர் ஆள் வேண்டுமென்று கேட்டான். நீ அவனுக்கு உதவியாகச் சில வேலைகள் செய்து கொடுத்தால், அவன் உனக்குப் பணம் தருவான். அந்தப்