பக்கம்:அசோகர் கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அசோகர் கதைகள்

பணத்தைச் சேர்த்து வைத்து நீ வசதியுள்ள மனிதனாக மாறி விடலாம்" என்றார் துறவி.

"வேலையா? எனக்கு ஒரு வேலையும் செய்யத் தெரியாதே" என்றான் இளைஞன்.

"வேலையென்றால் ஒன்றும் கடினமானதில்லை. சரி, அதோ அந்தப் பீடத்தை இந்தப் பக்கத்திலே எடுத்துப் போடு!" என்றார் துறவி.

அந்த இளைஞன் அவர் குறிப்பிட்டபடி பீடத்தைத் தூக்கிக் கொண்டு போய் அவர் குறிப்பிட்ட இடத்தில் மாற்றி வைத்தான்.

"தம்பீ. இப்பொழுது நீ என்ன செய்தாய்?" என்று கேட்டார் துறவி.

"அந்தப் பீடத்தை இடம் மாற்றி வைத்தேன்" என்றான் இளைஞன்.

"இது உனக்குக் கடிதாக இருக்கிறதா?" என்று கேட்டார் துறவி.

"இல்லை" என்றான் இளைஞன்.

"இதுபோல நீ அந்தத் தச்சனுக்கு ஏதாவது வேலைகள் உதவியாகச் செய்தால் அவன் உனக்குக் கூலி தருவான். அதில் உன் சாப்பாட்டுச் செலவு போக மீதியைச் சேர்த்து வைத்து உன் நிலையை உயர்த்திக் கொள்ளலாம். உன்னை அந்தத் தச்சனிடம் வேலைக்குச் சேர்த்துவிடவா?" என்று கேட்டார் துறவி.

இளைஞனுக்கு வேலையில் நாட்டமில்லை என்றாலும், தன் நிலையை உயர்த்திக் கொண்டு அசோக மன்னரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/16&oldid=734137" இலிருந்து மீள்விக்கப்பட்டது