பக்கம்:அசோகர் கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை ஒன்று

15

பார்த்துத் தன் கவலையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

துறவியிடம் சரி என்று சொல்லிவிட்டான். அவரும் அவனை ஒரு தச்சனிடம் வேலைக்குச் சேர்த்து விட்டார்.

தச்சன் முதலில் அந்த இளைஞனிடம் சிறுசிறு வேலைகள் வாங்கினான். மரக்கட்டைகளைத் தூக்கிக் கொண்டு வருவது, கருவிகளே எடுத்துக் கொடுப்பது, பலகைகளை அறுத்துக் கொடுப்பது போன்ற மிக எளிய வேலைகளை இளைஞன் முதலில் செய்தான். நாளாக ஆக அவன் பார்க்க வேண்டிய வேலைகள் விரிவு பெற்றன. உழைப்பும் அதிகமாயிற்று.

மூன்று மாதம் சென்றபின், இளைஞன் கையில் ஐம்பது ரூபாய் சேர்ந்திருந்தது. அதை எடுத்துக்கொண்டு மடத்துக்குச் சென்றன். ஆனால் துறவி அங்கில்லை. ஏதோ வெளியூர் ஒன்றுக்குச் சென்றிருப்பதாகவும், அங்கிருந்து பல ஊர்களுக்குச் சென்று திரும்பிவர நான்கைந்து மாதங்கள் செல்லும் என்றும் மடத்தில் இருந்த மற்ற துறவிகள் கூறினர்கள்.

இளைஞன் தச்சனிடம் திரும்பிச் சென்றான். வழக்கம் போல் அவனுக்கு வேலை பார்த்தான். நுண்ணிய தரமான வேலைகள் அவன் பார்க்கப் பார்க்கத் தச்சன் அவனுக்குக் கொடுக்கும் கூலியும் உயர்ந்தது. இளைஞன் தன் சாப்பாட்டுச் செலவுக்குப் போக மிகுந்த பணத்தையெல்லாம் சேர்த்து வைத்தான். இடையிடையே துறவியைத் தேடிச் சென்றான். அவர் அகப்படவேயில்லை. கடைசியாக ஓர் ஆண்டுக்குப் பிறகு அவன் கையில் ஐநூறு ரூபாய் சேர்ந்திருந்தது. அந்த ஐநூறு ருபாயுடன் துறவியைத் தேடி மடத்துக்குச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/17&oldid=734138" இலிருந்து மீள்விக்கப்பட்டது