பக்கம்:அசோகர் கதைகள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அசோகர் கதைகள்

அந்த முறை துறவி மடத்தில்தான் இருந்தார். அவனை அன்போடு வரவேற்றார் அவர்.

துறவி அவனுடைய நலத்தைப் பற்றியும், வாழ்க்கை முறை பற்றியும், வேலை பற்றியும் ஆதரவான முறையில் விசாரித்தார். எல்லாவற்றுக்கும் பதில் சொன்ன அவன் "ஐயா! இப்பொழுது என்னிடம் ஐநூறு ரூபாய் இருக்கிறது. மன்னரைப் பார்க்கப் போகும் நிலை வந்துவிட்டதா. நான் அவரைப் பார்க்கப் போகலாமா?" என்று கேட்டான்.

"தாராளமாகப் போகலாம்?" என்றார் துறவி.

"எப்படிப் போக வேண்டும்?" என்று கேட்டான் அவன்.

"இப்போது உள்ள நிலையிலேயே போகலாம்" என்றார் துறவி.

"புதிய ஆடைகள் எதுவும் அணிந்து கொள்ள வேண்டாமா? இந்த நிலையில் இந்த ஆடைகளுடன் என்னேக் கண்டால் காவலர் உள்ளே விடுவார்களா?" என்று கேட்டான் இளைஞன். "ஆடைகள் எப்படி யிருந்தால் என்ன? நீ தான் நிலையில் உயர்ந்து விட்டாயே!” என்றார் துறவி.

"நான் உயர்ந்தது காவலர்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டான் இளைஞன்.

"தெரியும். அசோகருடைய காவலாளிகளுக்கு பிச்சைக்காரன் யார், உழைப்பாளி யார் என்று நன்றாகத் தெரியும். அதற்கு ஆடை தேவையில்லே" என்றார் அந்தத் துறவி.

துறவியிடம் பழகப்பழக அவர்மேல் ஏதோ ஒரு விதமான நம்பிக்கையும் மதிப்பும் அந்த இளைஞனுக்கு ஏற்பட்