பக்கம்:அசோகர் கதைகள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அசோகர் கதைகள்

மற்றவர்களைப் போலவே தனக்கு இடத்தேடிக் கொள்வதிலும், தன் துணிமணி படுக்கைகளை ஒழுங்கு படுத்துவதிலும், குளிப்பதிலும் உணவு தேடுவதிலும் ஈடுபட்டிருந்தான். மதிய உணவு முடித்த பிறகு சிறிது கேரம் இளைப்பாறி விட்டு, மாட்டு வண்டிகளில் அவர்கள் ராஜகிரி கோக்கிப் புறப்பட இருந்தார்கள்.

சத்திரத்தில் பதிவேட்டுக்காரன் அவன் பெயரைக் கேட்டபோது மகாலிங்க சாஸ்திரி என்று கூறினன். அந்தப் பெயரைக் கொண்டும், அவன் கூடவந்த ஆட்களைப் பார்த்தும் அவன் ஒரு பிராமண இளைஞன் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

சத்திரத்துப் பதிவேட்டிலே ஊர் பேர்தான் குறிக்கப் படுமே தவிர சாதி குலமெல்லாம் குறிக்கப்படமாட்டாது. எல்லாம் தோற்றம், வழக்கம், பேச்சு வார்த்தைகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.

மகாலிங்க சாஸ்திரி என்ற அந்த இளைஞன், குளியல் முடித்து மற்றவர்களோடு, சத்திரத்தக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பிராமணர் வீட்டிலே போய்க் காசு கொடுத்துச் சாப்பாடு முடித்துக்கொண்டு வந்தான். மற்றவர்களோடு சேர்ந்து சத்திரத்து வெளித்திண்ணையிலே சிறிது சாய்ந்து ஓய்வுபெற முயன்றான்.

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்ற பழ மொழி பொய்யாகாத வண்ணம் கூட வந்த பிராமணர்கள் குறட்டைவிட்டுத் தூங்கலானர்கள். மகாலிங்க சாஸ்திரி யும் தூங்கியிருப்பான். ஆனால், உத்திரங்களிலும், சுவர்களிலும் எழுதியிருந்த அந்த வாசகங்கள் அவன் கண்களைக் கவர்ந்துவிட்டன.

மெல்ல எழுந்து அந்த வாசகங்களே ஒவ்வொன்ருகப் படித்துப் பார்த்துக்கொண்டு வந்தான். வாசற்கதவருகில்