பக்கம்:அசோகர் கதைகள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அசோகர் கதைகள்

எல்லா வாசகங்களையும் படித்து முடித்த பிறகுதான் அவன் வெளி வாசற் பக்கம் வந்தான்.

ஏற்கெனவே அங்கிருந்தவற்றை யெல்லாம் படித்து முடித்து விட்டபடியால் அவன் திரும்பவும் தான் படுத்திருந்த இடத்தை நோக்கிச் சென்றான். அப்போது, நுழை வாயிலில் கதவுக்கு மேலே எழுதியிருந்த எழுத்துக்கள் புதிதாக அவன் கண்களைக் கவர்ந்தன. முதல் முறை அவன் அவ்வாசகத்தைக் கவனிக்கவில்லை. இப்போது கொட்டை எழுத்துக்களில் பளிச்சென்று அந்த வாசகம் அவன் கண் முன்னே தோன்றியது. அவன் அந்த வாசகத்தையே திரும்பத் திரும்ப மனத்திற்குள் படித்து கொண்டான்.

எத்தனை முறை படித்தும் அவன் கண்கள் அந்த வாசகத்தை விட்டு அகலவில்லை. திரும்பத்திரும்ப அதன் பொருளைச் சிந்தித்துப் பார்த்தும் அவன் மனம் அதை - அக்கருத்தை - ஒப்புக்கொள்ள மறுத்தது.

மற்ற எல்லா வாசகங்களும் சரியென்று அவன் மனம் ஒப்புக் கொண்டு விட்டது. புத்த பெருமானின் புத்தம் புதிய புரட்சிகரமான அந்தக் கொள்கைகள் அவனுடைய இளம் உள்ளத்தைக் கவர்ந்தது வியப்புக் குரியதல்ல.

நேர்மையான நெஞ்சத்தோடு உண்மையை ஆராயும் அந்த இளம் உள்ளத்தில்லே அவை ஆழப் பதிந்தது ஆச்சரி யத்திற்கு குரியதல்ல.

ஆனால், மகாலிங்க சாஸ்திரியின் இளம் உள்ளம், புத்த பெருமானின் புதுக் கருத்துக்களைப் பொன்னே போல் போற்றி ஏற்றுக்கொண்ட அந்தத் தூய உள்ளம் இந்த ஒரு வாசகத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. தன் உள்ளம் ஏற்றுக்கொள்ள மறுத்த அந்த வாசகம் புத்த பெருமானுடையதாக இருக்க முடியாது என்று