பக்கம்:அசோகர் கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அசோகர் கதைகள்

"என் தக்தை பல ராஜ சபைகளிலும் வித்வ சபைகளிலும் பாடிப் பெற்ற பரிசுகள் பலப்பல. பொன்னகவும் பொருளாகவும், வீடாகவும், நிலமாகவும் அவர் தம் கலை ஞானம் ஒன்றைக் கொண்டே ஏராளமான சொத்து சேர்த்திருந்தார்.

"என் முதல் அண்ணன், பள்ளிக்கு ஒழுங்காகப் போகாமல் ஊர் சுற்றியாகவும் சூதாடியாகவும், தகாத நட்பினரோடு சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தான். அவனைத் தம் கண்ணிலேயே விழிக்க வேண்டாம் என்று விரட்டியடித்து விட்டார் என் தந்தை. ஆனால் அவர் இறந்த வீட்டிற்கு அண்ணன் அழுதுகொண்டே ஓடி வந்தான். இறந்த வீட்டிற்குத் துன்பத்தோடு வருபவனை விரட்டியடிக்கவா முடியும்? துக்க வீட்டில் நுழைந்தவன், தானே மூத்தவன் என்று வழக்காடி என் தந்தைக்குக் கொள்ளி வைத்தான். பிறகு கொள்ளி வைத்த உரிமையைக் காட்டி வழக்காடி எல்லாச் சொத்துக்களுக்கும் தானே நிர்வாகியாகி விட்டான். பின்னால் சொத்தில் பங்கு கொடுக்க முடியாதென்று கூறி எங்கள் மூவரையும் வீட்டை விட்டு விரட்டியடித்து விட்டான்.

"என் இரண்டாவது அண்ணன் ஒரு சோற்றுக் கட்டை. கல்வி அறிவும் கிடையாது; இயற்கை அறிவுங் கிடையாது; மூத்த அண்ணன் விரட்டியடித்த பிறகு, வீட்டை விட்டு வெளியேறிக் காசிக்குப் போய் அங்கு ஒரு சாஸ்திரி வீட்டில் சமையல் வேலை செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.

"மூன்றாவது அண்ணன் ஒரு பைத்தியம். அவனைக் கண்டால் என் தாய்க்கு அறவே பிடிக்காது; என் தந்தைக் கும் பிடிக்காது. என் தந்தை இருக்கும்போதே அவன் அரைப் பைத்தியமாக இருந்தான். பின்னல் அவர் இறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/32&oldid=734154" இலிருந்து மீள்விக்கப்பட்டது