உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அசோகர் கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை இரண்டு

31

மூத்த அண்ணன் எல்லோரையும் விரட்டியடித்த பிறகு இப்போது முழுப் பைத்தியமாகி விட்டான்.

"என் தாயோ, முத்த அண்ணனுக்குச் சாதகமாகப் பேசி எல்லாச் சொத்துக்களையும் அவனே ஆக்கிரமித்துக் கொள்ள உதவியாக இருந்தாள். அவன் கடைசியில் தன் மனைவியின் சொல் கேட்டு அவளேயும் அடித்து விரட்டி விட்டான். அவள் வீட்டு வேலைகள் செய்து கொடுத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறாள்.

"நான் என் தந்தையின் வழியைப் பின்பற்றிக் காசியில் ஒரு பண்டிதரிடம் சென்று கல்வி கற்று வருகிறேன். இப்போது ராஜகிரிக்கு என் தாயைப் பார்த்துவரத்தான் போகிறேன்.

"இப்போது சொல்லுங்கள். என் அண்ணன்மார் மூன்று பேரும் என்னைவிட வயதில் மூத்தவர்கள்தாம். இவர்களில் யாருக்காவது கான் மரியாதை காட்டும்படியாக இருக்கிறதா? யாருக்கு நான் மரியாதை செய்து போற்ற வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்? எங்களை மோசம் செய்து வீட்டை விட்டு விரட்டிய மூத்த அண்ணனுக்கா? சோற்றுப் பிண்டமாகத் திரியும் என் இரண்டாவது அண்ணனுக்கா? அல்லது பைத்தியமாக விடுதியில் அடை பட்டுக் கிடக்கும் என் மூன்றாவது அண்ணனுக்கா?”

இளைஞன் கேள்விக்கு அந்த மனிதர் உடனே பதில் சொல்லவில்லை. அவர் வாய் திறந்து பேசமுன் மகாவிங்க சாஸ்திரி மீண்டும் அவரைக் கேள்வி கேட்டான்.

"என் வாழ்க்கை அனுபவத்தை அறிந்த பின்னும் நீங்கள் இந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லுகிறீர்களா? அசோகர் இப்படிப்பட்ட பொருளற்ற கருத்துக்களைப் பரப்பக் கூடாது!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/33&oldid=734155" இலிருந்து மீள்விக்கப்பட்டது