பக்கம்:அசோகர் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அசோகர் கதைகள்

மகாலிங்க சாஸ்திரியின் இச் சொற்களைக் கேட்ட அந்தக் குடியானவர் முகத்தில் ஒரு புன்சிரிப்பு உதித்தது.

"நீங்கள் இன்னும் என் கருத்தை ஏற்றுக் கொள்ள வில்லை போலிருக்கிறதே!" என்று இளைஞன் மறுபடியும் கேட்டான்.

இவ்வளவு சொல்லியும் அந்த மனிதருக்கு அறிவில் படவில்லையே என்ற எண்ணம் அவன் மனத்தில் தோன்றவில்லை. வேறு யாருமாயிருந்தால் அவர்களைப் பற்றி இளே ஞன் அப்படித்தான் எண்ணியிருப்பான். ஆனால, அந்தக் குடியானவரிடம் ஏதோ ஒரு பெரிய ஆற்றல் இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. அவர் தன் கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டால், தான் ஒரு பெரிய சாதனை செய்த பலன் கிட்டும் என்பது போன்ற ஓர் உணர்வு அவனையறியாமல் அவன் மனத்தில் வேரூன்றி யிருந்தது.

"தம்பீ. என்மீது உனக்கு நம்பிக்கை உண்டாகிறதா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அவர்.

"ஐயா இதற்கு முன் நான் உங்களைப் பார்த்ததோ, பழகியதோ கிடையாது. ஆனால், இன்று உங்களைப் பார்த்த உடனேயே, எனக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கை உண்டாகி விட்டது" என்றான் இளைஞன்.

"அது போதும்! நான் இவ்வளவு நேரமும் நீ கூறியவற்றைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்; அவ்வளவும் கேட்ட பிறகு எனக்குத் தோன்றியது இதுதான்: உன் வாழ்க்கை அனுபவம் மிகச் சிறியது, அசோகருடைய அனுபவம் மிகப் பெரியது. நீ வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டும்தான் கண்டிருக்கிறாய்; அசோகர் வாழ்க்கையின் இரு பக்கத்தையும் கண்டவர். அவர் முழுக்க முழுக்க அனுபவித்து அறிந்த உண்மைகளைத்தான் நாடெங்